Last Updated : 22 Feb, 2014 12:27 PM

 

Published : 22 Feb 2014 12:27 PM
Last Updated : 22 Feb 2014 12:27 PM

தெலங்கானா பிறக்க காத்திருக்க வேண்டும்

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஆந்திரப் பிரிவினைக்கு சாத்தியம் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த கணிப்பிற்கு, மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் நடைபெற வாய்ப்பிருப்பது முக்கியத்துவம் அளிக்கிறது.

2000-ஆம் ஆண்டில் உத்தர்கண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்கள் உருவான விதத்தை நினைவு கூர்ந்தால், தேர்தலுக்கு முன்னர் தெலங்கானா மாநிலம் உருவாக வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கடந்த வியாழக் கிழமையன்று தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ள நிலையில், வரும் திங்கள் கிழமை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகே மசோதா சட்ட வடிவம் பெறும்.

இருந்தாலும், அது மட்டுமே ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா தனித்தனியாக பிறந்துவிட்டதாக அர்த்தமாகிவிடாது. மத்திய அரசி இதற்கான நாளை நிர்ணயிக்கும் வரை இது சாத்தியப்படாது.

ஆனால், மக்களவைத் தேர்தலும், ஆந்திர சட்டமன்றத் தேர்தலும் இதற்கு முன் நடைபெற்ற மாதிரியே நடைபெறும் என தேர்தல் ஆணையம் நம்புவதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெலங்கானா உருவாக்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்த தெலங்கானா பகுதி எம்.பி.க்களிடம், சீமாந்திரா மக்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுமாறு அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தெலங்கானாவை எதிர்க்கும் ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட சிலர் பிரிவினையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட இருக்கிறார்கள்.

ராஜினாமா ஏற்பு:

கிரண்குமார் ரெட்டி ராஜினாமாவை ஆளுநர் நரசிம்மன் வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டார். ரெட்டி 19-ஆம் தேதியன்று அளித்த ராஜினாமாவை அன்றைய தினத்தன்றே ஏற்றுக் கொண்டதாக ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கிறது. மேலும், புதிய அரசு அமையும் வரை கிரண்குமார் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு ஆளுநர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த மாதிரியான முடிவு எடுப்பார் என்ற யூகங்களை ஏற்படுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் உருவாக்கத்திற்கு காங்கிரஸ் வழிவகுத்த பிறகு, சீமாந்திரா மக்கள் பாஜக-வை இரண்டாவது குற்றவாளியாகவே பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கூட்டணி குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், "தெலங்கானா விவகாரத்தில் பாஜக சரியான வாதங்களை முன்வைக்கவில்லை, இருப்பினும் கூட்டணி விவகாரங்களை உணர்ச்சிவசப்பட்டு முடிவு செய்து விட முடியாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x