Published : 19 Jan 2016 05:46 PM
Last Updated : 19 Jan 2016 05:46 PM
தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலைக்கு பல்கலைக்கழக துணை வேந்தர், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா உள் ளிட்டவர்களேகாரணம் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
ஹைதராபாத் மத்திய பல் கலைக்கழக ஆராய்ச்சி (பிஎச்டி) மாணவர் ரோஹித் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர் வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணைவேந்தர் அப்பா ராவ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மனித உரிமை ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லி, மும்பை, ஹைதராபாத் உட்பட பல இடங்களில் பல்வேறு மாணவர் சங்கத்தினர், தலித் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட் டனர். அப்போது ரோஹித் தற் கொலைக்கு காரணமான மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பா ராவ் ஆகியோரை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள் ளது. இக்குழு நேற்று ஹைதராபா தில் விசாரணையை தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஹைதராபாத் நகருக்கு வந்தார். மத்திய பல்கலைக்கழகத்துக்குச் சென்ற அவர், மாணவர்கள், ரோஹித் குடும்பத்தினர், பல் கலைக்கழக ஊழியர்கள், பேராசிரி யர்களிடம் நடந்த விஷயங்களை கேட்டறிந்தார். பின்னர் ரோஹித் தின் தாயார் ராதிகாவை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
நான் இந்த விஷயத்தை வைத்து அரசியல் செய்ய இங்கு வர வில்லை. இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பாராவ் ஆகியோர் ஒரு தலைபட்சமாக முடிவெடுத்துள்ள னர். இதனால்தான் ரோஹித் தற் கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார். இதற்கு இவர்களே முக்கிய காரணம். எனவே, பண்டாரு தத்தாத் ரேயா, அப்பா ராவ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த ரோஹித் குடும்பத் தினருக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வழங்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
பட்டத்தை திருப்பித்தர முடிவு
லலித் கலா அகாடமி முன் னாள் தலைவரான அசோக் வாஜ்பாய்க்கு, ஹைதராபாத் பல்கலைக்கழகம் சில ஆண்டு களுக்கு முன்பு, கவுரவ முதுமுனை வர் (டி.லிட்) பட்டத்தை அளித்தது.
இந்நிலையில் தன் முதுமுனை வர் பட்டத்தை திருப்பி அளிக்கப் போவதாக அசோக் வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும் போது, “தலித்துக்கு எதிரான சகிப் பின்மை காரணமாக எழுத்தாள ராக விரும்பிய தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார். அரசியல் நிர் பந்தம் காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுத்த பல்கலைக் கழக நிர்வாகிகளுக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் எனது முது முனைவர் பட்டத்தை திருப்பி அளிக் கப்போகிறேன். பல்கலைக்கழகம் கண்ணியத்துக்கும், அறிவுக்கும் எதிராக நடந்து கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
சகிப்பின்மை தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதலில் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்தவர் அசோக் வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT