Published : 29 Oct 2013 09:07 AM Last Updated : 29 Oct 2013 09:07 AM
கர்நாடகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் இந்துத்துவா சக்திகள்: காரத்
பசு வதை, ஆண் பெண் இடையேயான நட்புறவுக்கு தடை போன்றவை தொடர்பான தனது செயல்பாடுகளால், கர்நாடகத்தில் பதற்றமான சூழ்நிலையையும் வகுப்பு மோதலையும் இந்துத்துவா சக்திகள் ஏற்படுத்தி வருகின்றன என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
'முஸ்லிம்களுக்கான உரிமைகள்' என்ற தலைப்பில் மங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பிரகாஷ் காரத் மேலும் பேசும்போது, "மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் திரட்டப்பட்ட ரூ. 60 லட்சத்தை வகுப்பு மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவுள்ளோம்.
சச்சார் கமிட்டியின் அறிக்கையில், முஸ்லிம்கள் படும் துயரங்களையும், அவர்களின் பின்தங்கிய நிலை குறித்தும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
WRITE A COMMENT
Be the first person to comment