Published : 07 Dec 2013 01:38 PM
Last Updated : 07 Dec 2013 01:38 PM
டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் 2104- நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என பரவலாக கூறப்பட்டு வருவதால், எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
நாளை பிற்பகலுக்குள் 4 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக் கணிப்பு:
ஏசி நீல்சன் (AC Nielsen) உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT