Published : 17 Feb 2014 01:32 PM
Last Updated : 17 Feb 2014 01:32 PM

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்

டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதேபோல், டெல்லி சட்டமன்றத்தை முடக்கிவைக்கவும் அவர் அனுமதி தந்தார்.

இந்தத் தகவலை, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இன்று மக்களவையில் வெளியிட்டார்.

முன்னதாக, ஜன்லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாததால் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து, டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், டெல்லி சட்டமன்றத்தைக் கலைக்காமல் முடக்கிவைக்கவும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

பின்னர், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும், சட்டமன்றத்தை முடக்கி வைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவையின் முடிவு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x