Published : 05 Jan 2014 05:42 PM
Last Updated : 05 Jan 2014 05:42 PM
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் வகையில் ஜனவரி 10-ஆம் தேதி முதல் கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
தேசிய செயற்குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ்: "ஆம் ஆத்மியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. கட்சிக்கு உறுப்பினர்கள் பலன் சேர்க்கும் வகையில் ஜனவரி 10 முதல் 26-ஆம் தேதி வரை உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்திற்கு "நானும் சாதாரண மனிதன்" என பெயரிடப்பட்டுள்ளது. மக்கள் ஆம் ஆத்மியில் வெறும் பெயரளவில் மட்டும் தங்களை இணைத்துக் கொள்ளாமல், நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு சேர வேண்டும்" என தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை மார்ச் மாதம் இறுதிக்குள் முடிவு செய்யப்பட்டு விடும் என அவர் தெரிவித்தார்.
குறைந்த பட்சம் 300 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த ஆம் ஆத்மி தயாராகி வருகிறது என்றும் 15 முதல் 20 மாநிலங்களில் தேர்தல் களம் காண தயாராக இருப்பதாகவும் யோகேந்திர யாதவ் கூறினார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஜனவரி 15 முதல் 20-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பிப்ரவரி மாதம் 2–வது வாரத்துக்குள் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டு விடுவார்கள். பிப்ரவரி 3–வது வாரம் முதல் நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT