Published : 23 Mar 2014 12:05 PM
Last Updated : 23 Mar 2014 12:05 PM

லாலு கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டார் ராகுல்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கால்நடைத் தீவன வழக்கில் தண்டனை பெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர்லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய மாட்டார்.

அவரின் கட்சி வேட்பாளர்க ளுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பிஹார் மாநிலத்தில் காங் கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலை சந்திக்கிறது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 27 தொகுதிகளில் லாலு தலைமையி லான ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிடுகிறது. ஓரிடம் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

கால்நடைத் தீவன வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு, எம்.பி. பதவியை இழந்த துடன், சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை யும் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த ராகுல் காந்தி, லாலு கட்சியுடன் கூட்டணி அமைக்க தொடக்கம் முதலே விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், பிஹாரில் காங்கிரஸின் செல்வாக்கு குறை வாக உள்ளதை கருத்தில் கொண்டு லாலுவுடன் அக்கட்சி கூட்டணி அமைத்தது.

பிஹாரில் முக்கிய தொகுதிக ளில் லாலுவுடன் இணைந்து பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரம் செய்யும் வகையில் தேர்தல் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியினர் செய்து வருகின் றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய தொகுதிகள் பட்டியலை லாலு கட்சி அனுப்பிவைத்துள்ளது.

இந்நிலையில், லாலுவுடன் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் இணைந்து பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமையக வட்டாரங்களில் கூறப்படுவதாவது: ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசி வரும் ராகுல் காந்தி, எவ்வாறு லாலுவுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய முடியும்.

லாலுவுடன் ராகுல் மேடை ஏறினால், பாஜக எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே, பிஹாரில் ராகுல் காந்தி தனியாக பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்வார்.

லாலுவுடன் இணைந்து மேடை ஏறாமல் இருப்பதுடன், அவரின் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளும் சேகரிக்க மாட்டார்” என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் செய்தித் தொடர் பாளர் ரந்தீர்குமார் யாதவிடம் ‘தி இந்து’ செய்தியாளர் கேட்ட போது, “பிரச்சாரக் கூட்டங்கள் பற்றிய முழுத் தகவல் தற்போது என்னிடம் இல்லை. அது பற்றிய தகவல் கிடைத்தவுடன் பேசுகிறேன்” என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பா ளர் பிரேம்சந்த் மிஸ்ரா கூறுகையில், “பிஹாரில் 6 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சோனியாவும், ராகுலும் இருமுறை பிரச்சாரம் செய்யவுள்ளனர். மற்ற விவரங்கள் இன்னும் முடிவாக வில்லை” என்றார்.

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகியவை கூட்டணி அமைத்து 29 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

2009 தேர்தலில் காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று லாலுவும், பாஸ்வானும் கூறினர். இதை ஏற்க மறுத்து காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. இத்தேர்தலில் லாலு கட்சிக்கு 4 இடங்கள் கிடைத்தன.

பாஸ்வான் கட்சி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.

இப்போதைய தேர்தலில் பாஸ்வானுக்கு குறைந்த எண்ணிக் கையிலான தொகுதியை லாலு ஒதுக்கினார். இதனால் பாஸ்வான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x