Published : 11 Nov 2015 10:41 AM
Last Updated : 11 Nov 2015 10:41 AM

டெல்லி தேர்தல் முடிவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை: பாஜக மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு

டெல்லி தேர்தல் முடிவிலிருந்து கட்சி மேலிடம் எவ்வித பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என பாஜக மூத்த தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாஜக மார்கதர்ஷக் மண்டலின் உறுப்பினர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மற்றும் மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹா, சாந்த குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பிஹார் தேர்தல் தோல்விக்கான காரணத்தை கண்டறிய பாஜக தலைமை தவறிவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

டெல்லியில் எல்.கே.அத்வானி இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இது குறித்து பாஜக கொள்கைவாதிகள் கே.என்.கோவிந்தாச்சார்யா, அருண் ஷோரி கூறும்போது, "டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பின்னர் கட்சி மேலிடம் எவ்வித பாடத்தையும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் பிஹாரிலும் தோல்வி ஏற்பட்டுள்ளது. பிஹார் தேர்தல் தோல்விக்கு அனைவருமே பொறுப்பு என்று கட்சி மேலிடம் கூறுவதன் மூலம் தனிப்பட்ட முறையில் யாரும் தோல்விக்கு பொறுப்பேற்க தயாராகயில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு காரணமாக இருந்தவர்களே தோல்வி குறித்து ஆய்வு செய்ய முடியாது. கட்சியின் கருத்து ஒருமைப்பாடு சிதைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கட்சி ஒருசிலரின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது" எனக் கூறியுள்ளனர்.

ஜேட்லி கருத்து:

பிஹார் தேர்தல் தோல்வி குறித்து நடைபெற்ற நாடாளுமன்ற குழு ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் பேசிய ஜேட்லி, "தேர்தல் தோல்விக்கு ஒட்டுமொத்த கட்சியினர் கூட்டாக பொறுப்பேற்கிறது. அதேவேளையில், பிஹார் தோல்விக்காக அமித் ஷா தலைமை பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்" என்றார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை அமித் ஷாவை குறிவைத்தே வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x