Published : 05 Nov 2014 10:00 AM
Last Updated : 05 Nov 2014 10:00 AM
பூட்டிய 4 வீடுகளில் ஒரே இரவில் திருடிய திருடர்களை பிடிக்க சென்ற போலீஸாரை, பதுங்கி இருந்த திருடர்களும், அவர்களுக்கு அடைக் கலம் கொடுத்த கிராமவாசி களும் ஓட ஓட அடித்து விரட்டினர்.
தெலங்கானா மாநிலம், ஆதிலா பாத் மாவட்டம்,கோருட்லா மண்டலம், யூசப்நகரில் கடந்த மாதம் ஒரே இரவில், பூட்டியிருந்த 4 வீடுகளில் ஒரு மர்ம கும்பல் புகுந்து நகை, பணம் போன்றவற்றை திருடி சென்றது.
கோருட்லா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, குற்றவாளி களைத் தேடி வந்தனர். அந்த திருட்டு கும்பலை சேர்ந்த கங்குடு, பூமண்ணா, மல்லேசம், சாயுடு ஆகிய 4 பேர் போத் மண்டலம் எட்பிட் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து எஸ்.ஐ. ஜயேஷ் ரெட்டி, மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள்கள் நிவாஸ், மல்லய்யா, சஹதேவ் ஆகியோர் திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு அங்கு சென்றனர். அங்கு ஒரு கிடங்கில் பதுங்கி இருந்த 4 பேரை மடக்கி பிடித்து அழைத்து சென்றனர். அப்போது எட்பிட் கிராமவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸாரை வழி மறித்தனர்.
விசாரணைக்காக அழைத்து செல்லும் 4 பேரை உடனடியாக விடு விக்க வேண்டும் என அவர்கள் போலீஸாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருக்கும், கிராமத்தினருக்கு மிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிராமத்தினர் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.
போலீஸாரால் பிடிக்கப்பட்ட 4 பேரும் சேர்ந்து போலீஸாரை அடித்து விரட்டினர். இதனால் போலீஸார் தங்களை பாது காத்து கொள்ள அங்கிருந்து ஓடி தப்பித்தனர். போலீஸாரை சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை கற்கள், கொம்புகளால் திருடர் களும், கிராமத்தினரும் ஓட ஓட விரட்டியடித்துள்ளனர். இதில் எஸ்.ஐ ஜெயேஷ் ரெட்டி உட்பட கான்ஸ்டபிள்கள் காயமடைந்து ஆதிலாபாத் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கோருட்லா காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT