Published : 03 May 2017 02:52 PM
Last Updated : 03 May 2017 02:52 PM
இமயமலையின் உயரம் 29,028 அடிகள். அதிகாரப்பூர்வமாக இவ்வளவீடுகள் 1856ஆம் ஆண்டு வருடாந்திர ஆய்வில் எடுக்கப்பட்டன. இந்த அளவீடு மறு ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாக இந்திய சர்வே துறை தெரிவித்துள்ளது.
உலகிலேயே உயரமான மலையான இமய மலையில் மட்டும் 15 ஆயிரம் பனிப்பாறைகள் உள்ளன. இதன் பரப்பளவு 12 ஆயிரம் கிலோமீட்டர். பனிப்பாறைகள் உலகிலேயே மூன்றாவதாக அதிகம் உள்ளடக்கிய மலை இது.
இமயமலையின் மீது மிக உயர்ந்த சிகரமாக அமைந்திருக்கும் எவரெஸ்ட் சிகரமே உலகின் உயரமான சிகரம். இதன் உயரம் 8,848 அடிகள், இதனோடு சேர்த்து இமயமலையின் உயரம் 29,028 அடிகள். அதிகாரப்பூர்வமாக இவ்வளவீடுகள் 1856ல் எடுக்கப்பட்டன. இந்த அளவீடு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தில் செவ்வாய் அன்று 14வது சர்வதேச அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இந்திய நில அளவைத் துறையினரின் ஆய்வுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்ட இந்திய சர்வேத் துறையின் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்) கர்நாடகா புவி ஆய்வு மைய இயக்குநர் எம்.ஸ்டாலின் ஸ்டாலின் பேசியதாவது:
நேபாள நிலநடுக்கம்
1856ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர அளவீட்டின்படி எவரெஸ்ட் மலையின் உயரம் 29,028 அடி உயரம் உள்ளது. நேபாளத்தில் 2015ல் நடந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இது மாறியிருக்கக்கூடும் என நிலஅளவை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்திய சர்வே துறை எவரெஸ்ட் சிகரத்தை மறு அளவீடு செய்ய உள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திய சர்வேத் துறையின் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்) இதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
புதிய வரைபடங்கள்
சமீபத்திய தேசிய வரைபடக் கொள்கை 2005ன்படி அவர்கள் 1, 50,000 அளவில் தொடர் வரைபடங்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதில் எந்த நிலப்பரப்பு வரைபடத்திற்கும் எந்தவொரு இடத்தையும் எந்தவொரு நபரும் பெற முடியும்.
தேசிய நகர்ப்புற தகவல் அமைப்புகளின் கீழ், முதல் கட்டமாக இந்தியாவில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கான பெரிய அளவிலான வரைபடங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்,
இணயைத்தில் வரைபடங்கள்
இந்த வரைபடங்களைப் பெறுவதற்கென்றே பிடிஎப் வகையிலான வரைபடங்கள் இணையத்தில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 'nakshe' எனும் இணையதளத்தை ஏப்ரல் 10 அன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் தொடங்கிவைத்தார்.
இதில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையான எவ்வித வரைபடத்தையும் பெறலாம். இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில புதிய வரைபடம் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட உள்ளது என்றார்.
2015 நிலநடுக்கம்
ஏப்ரல் 2015-ல் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 'கர்கா பூகம்பம்' என்றும் அழைக்கப்படுகிறது. இது ஏப்ரல் 25 அன்று 11:56 நேபாள ஸ்டான்டர்ட் நேரத்தில் ஏற்பட்டது, 7.8 ரிக்டர் அளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தில் இதில் கிட்டத்தட்ட 9,000 பேரைக் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 22,000 பேர் காயமுற்றனர். இதன் தாக்கம் இமய மலையின் உச்சிவரை இருக்கும், நிச்சயம் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் மாறியிருக்கக் கூடும் என நில அளவை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஆண்டு, தேசிய அளவில் செயல்பட்டுவரும் இந்திய நில அளவுத்துறையின் 250 ஆண்டுக் கொண்டாட்டமாக நினைவுகூரப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT