Published : 28 Oct 2015 07:47 AM
Last Updated : 28 Oct 2015 07:47 AM
பாலியில் சிக்கிய சோட்டா ராஜனை அங்குள்ள போலீஸார் கைது செய்தனரா அல்லது ராஜன் தானாக முன்வந்து சரண் அடைந் தாரா என சர்ச்சை கிளம்பியுள்ளது.
தாவூதின் நெருங்கிய கூட்டாளி யாக இருந்த ராஜன், அவரிட மிருந்து பிரிந்த பின், தாவூத் பற்றி மும்பை போலீஸார் மற்றும் மத்திய உளவுத் துறைக்கு உளவு சொல்பவராக மாறிவிட்டதாக கூறப் பட்டது. ஹாங்காங் ஹோட்டல் ஒன்றில் ராஜன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் குண்டடிபட்டு நூலிழையில் உயிர் தப்பினார். அவரை அந்நாட்டு அரசு ‘நட்பு’ காரணமாக தப்பவிட்டதாக கூறப்பட்டது.
இதற்கு முன்பாக 1998-ல் ஒருமுறை தாய்லாந்து போலீஸா ரிடம் சிக்கிய சோட்டா ராஜனை விசாரிக்க இந்திய அரசு முன்வரவில்லை. இதனால், அங்கிருந்தும் ராஜன் விடுவிக் கப்பட்டு விட்டார்.
பாகிஸ்தானின் உளவுதுறை யான ஐ.எஸ்.ஐ அமைப்பினர் உட்பட சில தீவிரவாதிகளையும் ராஜன் தனது ஆட்கள் மூலமாக நேபாளம் உட்பட பல்வேறு நாடு களில் கொன்றதன் மூலம் இந்திய உளவுத்துறைக்கு அவர் மறை முகமாக உதவி இருப்பதாகவும் கருதப்படுகிறது.
2005 டிசம்பரில் தாவூதை ராஜன் கொல்ல முயன்றார். தாவூதின் மகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியாண்டட்டின் மகனுடன் நடந்த திருமணத்தின் போது இந்த கொலை முயற்சி நடந்தது. இதன் பின்னணியில் இந்திய உளவுத் துறை அதிகாரிகள் சிலர் இருந்தாகவும் கூறப்பட்டது. இதில் குறிப்பாக மத்திய உளவுத் துறையின் தலைவராக இருந்து 2005 ஜூலையில் ஓய்வு பெற்றிருந்த அஜீத் தோவலின் பெயரும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு தோவலுடன் ராஜனின் கும்பலை சேர்ந்த விக்கி மல்ஹோத்ரா என்பவர் டெல்லியில் காரில் சென்ற போது பிடித்து விசாரிக்கப்பட்டது ஆதாரமாகக் கூறப்பட்டது.
எனவே தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக இருக்கும் தோவல் எடுத்த முயற்சியின் பலனாகவே ராஜன் கைது நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய உளவுத் துறை வட்டாரங்கள் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “ஹாங்காங் தாக்குதலுக்கு பின் சோட்டா ராஜ னிடம் இருந்து அவரது முக்கியக் கூட்டாளிகள் பிரிந்து, ராஜன் வலுவிழக்கத் தொடங்கினார். இத் துடன் சில ஆண்டுகளாக ராஜனின் கிட்னி செயலிழந்து அவ்வப்போது அவர் ரத்த சுத்திகரிப்பு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். ராஜனின் குடும்பம் மும்பையில் இருக்கும் நிலையில், தன் எஞ்சிய காலத்தை இந்திய சிறைகளில் கழிக்க ராஜன் முடிவு செய்ததால் தான் இந்த கைது நடைபெற்றுள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.
இப்போதும் கூட தாவூதின் கூட்டாளிகளுடன் சோட்டா ராஜ னுக்கு தொடர்பு இருப்பதாக நம் பப்படுகிறது. தாவூதின் அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்த ஒரே இந்திய உளவாளியாக ராஜன் கருதப்படுவதால் அவர் தாவூதை பிடிக்க பெரிதும் உதவியாக இருப் பார் எனவும் கருதப்படுகிறது. ராஜ னுக்கு இருக்கும் தாதா கும்பல்களின் தொடர்பு மூலம் தாவூதை கைது செய்யலாம் என மத்திய அரசு நம்புகிறது. இதை ஏற்கெனவே எதிர்பார்த்து ராஜனை கொல்ல தாவூத் முயற்சி செய்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பும் ஆஸ்திரேலியாவில் ராஜனை கொல்ல தாவூத் முயன்றதாக கூறப்படுகிறது.
உண்மையாகி விட்டதா சோட்டா ராஜனின் பாலிவுட் படக் கதை?
மும்பை தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் பல படங்கள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலானவை வெற்றி பெற்றுள்ளன. இந்த வகையில் தாவூத் இப்ராகிம் வாழ்க்கையை கதையாகக் கொண்ட ‘கம்பெனி’ என்ற படமும் வெற்றிப் படமானது. இதில் சோட்டா ராஜனாக ‘சாந்து’ எனும் பாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்தார். பல நாடுகளில் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் காட்டப்படும் சாந்து, இறுதில் இந்தோனேஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்திய சிறையில் அடைக்கப்படுகிறார். பிறகு சிறையில் இருந்தபடியே தனது பரம விரோதியும், முன்னாள் கூட்டாளியுமான மல்லீக் (தாவூதின் பாத்திரத்தில் நடித்த அஜய்தேவ்கான்) கும்பலை சிதைக்க போலீஸாருக்கு உதவுகிறார். கற்பனையாக காட்டப்பட்ட இந்தப் படத்தின் முடிவு தற்போது, சோட்டா ராஜன் இந்தியா கொண்டு வரப்படுவதால் உண்மையாகி விடும் போல் தெரிகிறது. இந்த திரைப்படத்தை ராம்கோபால் வர்மா இயக்கி இருந்தார்.
தாவூத் இப்ராஹிமின் அனைத்து நடவடிக்கை களையும் அறிந்த ஒரே இந்திய உளவாளியாக ராஜன் கருதப்படுவதால் அவர் தாவூதை பிடிக்க பெரிதும் உதவியாக இருப்பார் என கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT