Published : 03 Apr 2017 01:12 PM
Last Updated : 03 Apr 2017 01:12 PM
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் நவுகட்டா பகுதியில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து கையெறி குண்டு வீசப்பட்டதில் போலீஸ் அதிகாரி பலியானார். 11 பேர் காயமடைந்தனர்.
வெடி விபத்தில் பலியான போலீஸ் அதிகாரி ஷமி அகமத் என அடையாளம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "காஷ்மீரின் நவுகட்டா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் 11 பேர் காயமடைந்தனர். இவர்களில் 4 பேர் போலீஸார். இதில் ஒருவர் உயிரிழந்தார்" எனக் கூறப்பட்டது.
மோடிக்கு எதிர்ப்பா?
பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த குகைப் பாதையை திறந்து வைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை ஜம்மு சென்றிருந்தார்.
நரேந்திர மோடியின் ஜம்மு - ஸ்ரீ நகர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தாக்குதல் நடத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் அங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளதாக்கு பகுதிகளில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT