Published : 25 Apr 2017 08:55 AM
Last Updated : 25 Apr 2017 08:55 AM
‘கலா தபஸ்வி’ என அழைக்கப் படும் பிரபல இயக்குநர் கே.விஸ்வ நாத்துக்கு (87) திரைப்படத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் நேற்று அறிவித்தார்.
இயக்குநர் கே.விஸ்வநாத் 19.2.1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், நாகேந்திரநாத், ரவீந்திரநாத் என்கிற மகன்களும், பத்மாவதி என்கிற மகளும் உள்ளனர்.
இவர் கடந்த 1957-ல் சென்னை யில் தனது திரைப்பட வாழ்க் கையை தொடங்கினார். 1975-ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்கு நந்தி விருது வழங்கப்பட்டது.
அதன் பின்னர் இவர் சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, உட்பட பல தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை இயக்கினார். இவர் தமிழில் குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி, அன்பே சிவம், ராஜபாட்டை, சிங்கம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT