Last Updated : 08 Jun, 2017 04:13 PM

 

Published : 08 Jun 2017 04:13 PM
Last Updated : 08 Jun 2017 04:13 PM

உஷ்ணமாகும் இந்தியா; அதிகரிக்கும் வெப்ப அலைகள்; விவசாயிகள், ஏழைகளுக்கே அதிக பாதிப்பு: ஆய்வில் தகவல்

அரை நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததை விட இந்தியா பெரிய அளவில் கடும் வெப்ப அலைகளை சந்திக்கவுள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய மக்கள் விவசாயத்தைச் சார்ந்தே இருப்பதால், வெப்பநிலை மாற்றம் அவர்களின் வாழ்வாதாரமான பயிர்களைத் தாக்க அதிக வாய்ப்புண்டு என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் மூலம் உலகம் இன்னும் வெப்பமயமாதலை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது. கடந்த இரு வாரங்களாக ஆசியாவில் வெப்ப அலைகள் பெரிய அளவில் இருந்து வருகின்றன. மே மாதம் 28-ம் தேதி பாகிஸ்தானிய நகர்ம் துர்பாத்தில் 53.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது. இது மேமாதத்தில் உலகில் வேறெங்கும் பதிவாகாத வெப்ப அளவாகும். புதுடெல்லியில் வெப்ப நிலை 44 டிகிரி செல்சியசையும் கடந்து சென்றது .

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தங்களுக்கு இணங்க துல்லியமாக நாடுகள் வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தினாலும் 2 டிகிரி செல்சியஸ் உயர்வதை தடுக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும், ”இன்னும் கூடுதலான வெப்ப அலைகள் இன்னும் மக்கள் கூட்டத்தினை அழிக்கவே செய்யும்” என்கிறார் கலிபோர்னியா பல்கலை பருவநிலை ஆய்வாளர் ஒமித் மஸ்தியாஸ்னி. தாக்கம் இருக்கும் என்பதை அறிவோம் ஆனால் அது இத்தனை பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார் இவர்.

வெப்ப அலைகளாலும், வெப்ப நிலை அதிகரிப்பினாலும் இந்தியாவின் ஏழை மக்களே அதிகம் உயிரிழக்கின்றனர், கடந்த ஆண்டு இந்தியாவின் ஜெய்சாலமரில் 52.4 டிகிரி செல்சியஸ் வெயில் அடித்து சாதனையை ஏற்படுத்தியது.

2010-ம் ஆண்டு அகமாதாபாத்தில் வெப்ப அலைக்கு சுமார் 1,200 பேர் பலியாகினர். பொதுவாக ,மாநிலங்களுக்கு இந்த அதிகரிக்கும் வெப்ப நிலை குறித்து என்ன செய்வதென்றே தெரியாமல் தத்தளிப்பதே இந்தியாவில் நடந்து வருகிறது. என்று ஐநா சுற்றுச்சூழல் அறிக்கை கடந்த ஆண்டு எச்சரித்தது.

விவசாயிகள், கட்டுமானப்பணியாளர்கள் நாளொன்றுக்கு 3-4 மணிநேரமே உழைக்க முடிகிறது, இதனால் வருவாய் குறைகிறது, காரணம், வெயிலில் வேலை செய்ய முடியவில்லை.

“பொதுவாக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் வெப்ப நிலை 1 அல்லது 2 டிகிரி அதிகரித்தால் அது ஒன்றும் பிரச்சினையல்ல என்ற எண்ணப்போக்கு உள்ளது. ஆனால் விளைவுகள் மோசமானது என்பதே அறிவியல் உண்மையாகும்.

மேலும் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் 25% அதிகமாகியுள்ளது என்கிறது இந்த ஆய்வு.

இந்த ஆய்வு முடிவுகள் சயன்ஸ் அட்வான்சஸ் என்னும் இதழில் வெளியாகியுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

* இந்தியாவில் அரை நூற்றாண்டுக்கு முன்பு இருந்த வெப்ப அலைகள் தற்போது இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளன. இதற்குக் காரணம் சராசரி வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்ததே.

* உலகம் புவி வெப்ப மயமாதலை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பாகிஸ்தானி நகரத்தில் உலகத்திலேயே அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு மே 28-ம் தேதி பதிவான வெப்பநிலை 53.5 டிகிரி செல்சியஸ். தலைநகர் டெல்லியில் 44 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெயில் கொளுத்தியது.

* நாட்கள் செல்லச்செல்ல இந்தியாவில் வெப்பம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. வெப்ப அலைகள் அதிக மக்களைக் கொல்லக் கூடும் என்கிறார் இந்திய வானியல் துறையின் வெப்பம், வெப்ப அலைகள், வெப்பம் சார்ந்த இறப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வானியல் நிபுணர் ஒமீது மஸ்டியாஸ்னி.

* 1960 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் வெப்பத்தினால் இறப்பவர்களின் விகிதமும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக 146 சதவீதம் அதிகரித்துள்ளது.

* ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு தட்பவெப்பவியலாளர் கூறும்போது, ''பொதுமக்களுக்கு 1 டிகிரி, 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வால் என்ன ஏற்படப் போகிறது என்ற எண்ணம் இருக்கலாம். ஆனல மிகச் சிறிய அளவிலான தட்ப வெப்ப மாற்றங்கள் அதிக வெப்ப அலைகளை உருவாக்கி, ஏராளமான உயிர்களைக் கொல்லும்'' என்று எச்சரிக்கிறார்.

* இந்தியாவில் வசிக்கும் 125 கோடி மக்கள் ஏழைகளாக இருக்கின்றனர். வீடு, வாசல் இல்லாத அவர்களே வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

* காடுகள் அழிப்பு, ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவது, நிலத்தடி நீர் சுரண்டல், விலங்குகளை அழித்தல் ஆகியவை வெப்பநிலை மாற்றத்துக்கான முக்கியக் காரணமாக அமைகிறது.

* இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தைச் சார்ந்தே இருப்பதால், வெப்பநிலை மாற்றம் அவர்களின் வாழ்வாதாரமான பயிர்களைத் தாக்க அதிக வாய்ப்புண்டு.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x