Last Updated : 26 Nov, 2014 09:51 AM

 

Published : 26 Nov 2014 09:51 AM
Last Updated : 26 Nov 2014 09:51 AM

மாணவிகளையும் நூலகத்தில் அனுமதிக்க வேண்டும்: அலிகார் பல்கலை.க்கு ஐகோர்ட் உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள மவுலானா ஆசாத் மத்திய நூலகத்தில் கல்லூரி மாணவிகளையும் அனுமதிக்க வேண்டுமென்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சட்டக்கல்வி பயிற்சி மாணவியும் சமூக சேவகருமான தீட்ஷா துவேதி கடந்த 14-ம் தேதி ஒரு பொதுநல மனுவை நீதிமன்றத்தில் அளித்திருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.கே.எஸ்.பகேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இது தொடர்பாக துணைவேந்தர் ஜமீருத்தீன் ஷா அளித்த பதிலில், மகளிர் கல்லூரி 3.5 கி.மீ தொலைவில் இருப்பதால் பல்கலைக்கழக நூலகத்துக்கு மாணவிகள் வந்து செல்வதில் பாதுகாப்பு பிரச்சினை உள்ளது. மேலும், நூலகத்தில் இடப்பற்றாக்குறையை தீர்க்க மத்திய மனிதவளத்துறையிடம் ரூ.20 கோடி கேட்டுள்ளோம் என்று தெரிவித்திருந்தார். பெண்கள் முன்னேற்றத்துக்கு நான் தடையாக இல்லை எனவும் தனது பதிலில் துணைவேந்தர் சுட்டிக்காட்டி இருந்தார்.

அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாணவிகளை நூலகத்தில் உடனடியாக அனு மதிக்க வேண்டும் என உத்தரவிட்ட னர். மேலும், பல்கலைக்கழக நூல கத்தில் மாணவிகளை மட்டும் அனுமதிக்காமல் இருப்பது நியாய மற்றது எனவும், அது அரசிய லமைப்பு சட்டத்தின் பிரிவுகள் 14 மற்றும் 16-ஐ மீறுவதாகும் எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வழக்கு தொடுக்கப்படு வதற்கு சில நாட்களுக்கு முன் பாக, பல்கலைக்கழகத்தின் மகளிர் கல்லூரி விழாவில் பேசிய ஜமீருத் தீன் ஷா, பட்டப்படிப்பு மாணவி களை நூலகத்தில் அனுமதித்தால் அங்கு மாணவர்கள் 4 மடங்காகப் பெருகி விடுவார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியதை அடுத்து இந்த பிரச்சனை கிளம்பியது.

உயர் நீதிமன்ற உத்தரவால் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் கடந்த 54 ஆண்டுகளாக மாணவிகளுக்கு இருந்த தடை முடிவுக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x