Published : 16 Mar 2014 04:00 PM
Last Updated : 16 Mar 2014 04:00 PM
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் ரெஸ்டாரன்ட் ஒன்றில் “ராகா பேஸ்கட்”, “நமோ தாளி” என்ற பெயர்களில் ஸ்பெஷல் மெனுக்களை அறிமுகம் செய்து அரசியல் விருந்து படைக்கின்றனர்.
அலாகாபாத் நகரின் மையப்பகுதியான சங்கம் சிட்டி என்ற இடத்தில் தந்தூர் என்ற ரெஸ்டாரன்ட் உள்ளது. வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு, “மிஷன் மே 2014” என்ற பெயரில் ஸ்பெஷல் மெனுக்களை அறிவித்துள்ளனர்.
இதில் ராகா சாப்பாடு என்பது வடஇந்திய மற்றும் தென்னிந்திய உணவுகளை கொண்டதாக உள்ளது. 2 இட்லி, 2 வடை மற்றும் ஒரு வடஇந்திய உணவுடன் காவி, வெள்ளை, பச்சை என 3 வண்ணங்களில் சட்னி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.90.
மற்றொரு மெனுவான நமோ தாளி என்பது பெரும்பாலும் காவி நிறத்தில், குஜராத்தி உணவுக்குரிய நறுமணத்துடன் தரப்படும் சைவ உணவு. இதனுடன் குஜராத்தி காக்ரா தரப்படுகிறது. இதன் விலை ரூ.110
புதிய மெனுக்கள் குறித்து ரெஸ்டாரண்ட் மேலாளர் அருண் சுக்லா கூறுகையில், “வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், அவர்கள் தங்கள் முன்புள்ள பல்வேறு அரசியல் வாய்ப்புகளை அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த மெனு. அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தேர்தல் முக்கியம். மக்களுக்கு அரசியலை விளக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு தேர்தல் சிந்தனை ஏற்படும்” என்றார். இந்த மெனுவுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்லோகன் ஒன்றையும் சுக்லா உருவாக்கியுள்ளார். “சரியானதை சாப்பிடுங்கள், சரியானதை சிந்தியுங்கள், சரியானவருக்கு வாக்க ளியுங்கள்” என்பதுதான் அந்த ஸ்லோகன்.
இதற்கு முன் சமூக ஆர்வலர் அண்ணா ஹசா ரேவுக்கு அர்ப்பணிக்கும் வகையிலும், டெல்லியில் ஓடும் பஸ்ஸில் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி நினைவாகவும் இந்த டெஸ்டாரன்ட் மெனு வடிவ மைத்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT