Published : 06 Nov 2014 05:00 PM
Last Updated : 06 Nov 2014 05:00 PM

கருப்புப் பணம்: ’அன்னிய செலாவணி மோசடித் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை’

கருப்புப் பண விவகாரத்தை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, அன்னிய செலாவணி மோசடித் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது.

மற்ற நிதி மோசடி விவகாரங்களையும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

நடப்பு சட்ட நடைமுறைகளின் படி, அமலாக்க இயக்குனரகத்தினால், நிதி பரிவர்தனை மோசடியை விசாரித்து, குற்றம்சாட்டப்படுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி, சொத்துக்களை முடக்க மட்டுமே முடிகிறது. அதாவது அன்னிய செலாவணி உள்ளிட்ட, இச்சட்டத்தில் பட்டியலிடப்பட்ட முறைகேடுகளை மட்டுமே அமலாக்க இயக்குனரகம் விசாரணை செய்ய முடிகிறது.

28 சட்டப்பிரிவுகளில் 156 குற்றங்களே அன்னிய செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுரங்க ஒதுக்கீடு சட்டம், சுரங்கம் மற்றும் கனிம மேம்பாடு சட்டம், வருமான வரி முறைகேடுகள், சுங்க வரி முறைகேடுகள், மற்றும் பிற நேரடி மற்றும் மறைமுக வரி சட்டங்கள் என்று அனைத்தையும் அன்னியச் செலாவணி மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றி கருப்புப் பண விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், இத்தகைய சட்டத் திருத்தங்களுக்காக பரிந்துரைகளையும் சிறப்பு விசாரணைக் குழு, அமலாக்கப் பிரிவு மற்றும் வரிகள் வாரியம் ஆகிய துறைகளிடமிருந்து கோரியுள்ளது.

அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்திலும் தேவையான மாற்றங்களை வலியுறுத்தியுள்ள சிறப்பு விசாரணைக் குழு, பிற நாடுகளுடன் செய்து கொள்ளும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்களிலும் நமக்குத் தகுந்த மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

அதாவது இதன் மூலம் கருப்புப் பண விவகாரம் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பான தகவல்களை விசாரணை செய்யும் அமைப்புகளுடன் சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும், குறிப்பாக அமலாக்க இயக்குனரகம் இந்தத் தகவல்களைப் பெற்று சட்ட இடர்பாடின்றி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இந்த திருத்தங்கள் அமையுமானால் பயனுடையதாக இருக்கும் என்று சிறப்பு விசாரணைக் குழு அறிவுறுத்தியுள்ளது.

அயல்நாடுகளில் பதுக்கப்படும் கருப்புப் பணம் பற்றிய கவனத்துடன் உள்நாட்டுக் கருப்புப் பண விவகாரமும் கவனம் பெறுவது அவசியம் என்று சிறப்பு விசாரணைக் குழு கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x