Published : 26 Jun 2016 12:03 PM
Last Updated : 26 Jun 2016 12:03 PM
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் அரசு சார்பில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இங்கு மலிவு விலையில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதுபோல ஆந்திராவிலும் தொடங்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார்.
இதையடுத்து, ஆந்திர பொது விநியோகத்துறை அமைச்சர் பரிடால சுனிதா மற்றும் இத்துறையின் உயர் அதிகாரிகள் குழு கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பான அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஆந்திரா வின் புதிய தலைநகராக உருவாகி வரும் அமராவதியில் உள்ள வெலுகுபூடி பகுதியில் என்.டி.ஆர் கேன்டீன் என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, “தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இத்திட்டத்தால் ஏழைகள் 3 வேளையும் வயிறார சாப்பிட்டு வருவது தெரியவந்தது. இதனால் இத்திட்டத்தை ஆந்திராவிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. என்.டி.ஆர். கேன்டீன் என்ற பெயரில் அமராவதியில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல விரைவில் மாநிலம் முழுவதிலும் திறக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT