Last Updated : 08 Nov, 2014 03:53 PM

 

Published : 08 Nov 2014 03:53 PM
Last Updated : 08 Nov 2014 03:53 PM

அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக-வுக்கு சிவசேனா நிபந்தனை

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் அது தொடர்பாக சிவசேனா பாஜக-வுக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இதில் சிவசேனாவின் சார்பில் அந்தக் கட்சியை சேர்ந்த அனில் தேசாயின் பெயர் பாஜக தலைமையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு முன்பாக மகாராஷ்டிராவில் அமைச்சரவை குறித்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் அனில் தேசாய்க்கு வழங்கப்படும் பொறுப்பை ஏற்க முடியாது என்று சிவசேனா நிபந்தனை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x