Last Updated : 08 Jan, 2014 12:00 AM

 

Published : 08 Jan 2014 12:00 AM
Last Updated : 08 Jan 2014 12:00 AM

இந்தியாவில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு பாகிஸ்தானே காரணம்

சென்னையில் கள்ள ரூபாய் நோட்டு களை புழக்கத்தில் விட முயன்ற 5 பேரை போலீஸார் கடந்த வாரம் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். தமிழக சிபிசிஐடி-யின் கள்ளநோட்டு தடுப்பு பிரிவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

குடிசை தொழில்

இந்தியாவுக்குள் வரும் கள்ள ரூபாய் நோட்டுகளில் 90 சதவீதம், மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள பைஸ்னாப், காலியாச் ஆகிய இடங்களில் இருந்துதான் வருகின்றன.

இந்த இரு இடங்களும் வங்கதேசத்தின் எல்லைப் பகுதிகளில் இருப்பதால் அந்த நாட்டை சேர்ந்த ஏஜென்டுகள் எளிதாக ஊருக்குள் நுழைந்து கள்ள ரூபாய் நோட்டுகளை சப்ளை செய்கின்றனர்.

அப்பகுதி மக்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி, அவர் களுக்கு வேலை கொடுப்பதாகக் கூறி, ரூபாய் நோட்டுகளை கொடுக் கின்றனர்.

இவற்றை மொத்தமாக வாங்கி விநியோகம் செய்து நல்ல நோட்டுகளாக மாற்றி, அவற்றை திருப்பி கொடுப்பதற்கு நிறைய ஏஜென்டுகளும் அங்கு இருக் கின்றனர்.

ரூ.100 கள்ள நோட்டுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை திருப்பிக் கொடுத்தால் போதும். குடிசைத் தொழில் போல, பல வீடுகளில் இந்த தொழிலை செய்கின்றனர். இதனால் அவர்களை கண்டுபிடிப் பது மிகவும் கடினம்.

சிங்கப்பூர், மலேசியாவில் கள்ளநோட்டு தொழில்நுட்பம்

வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகள் கொண்டுவரப்பட்டாலும், உண்மையில் இந்த வேலைகள் அனைத்தை யும் செய்வது பாகிஸ்தானைச் சேர்ந் தவர்கள் தான். துபாய் மற்றும் ஹாலந்து நாடுகளில் கள்ள நோட்டு களை அச்சடித்து, அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு கொண்டு சென்று, பின்னர் வங்க தேசம் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர். இதற்கான தொழில்நுட்பங்களை மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வரவழைத்து அச்சடிக்கின்றனர். வங்கதேசம் வழியாக கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும்போது, நேபாளம் வழியாக கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர்.

சி.எம்.சி மருத்துவமனையில் முதல் கள்ளநோட்டு

கள்ள நோட்டு விநியோகம் செய்ப வர்கள் மிகப் பெரிய நெட்வொர்க்காக செயல்படுவதையே 2006-ம் ஆண்டில்தான் முதலில் தமிழக காவல் துறையினர் கண்டுபிடித்த னர். வேலூர் சி.எம்.சி.யில் இருதய அறுவை சிகிச்சைக்காக சேர்ந்த ஒருவர் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுகள் இருந்தன.

பின்னர் நடத்திய விசாரணை யில்தான் இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட, பாகிஸ்தான் மிகப்பெரிய அளவில் நெட்வொர்க் அமைத்து செயல்படுவதை முதலில் கண்டுபிடித்தனர். அதை மத்திய அரசுக்கும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மேற்கு வங்க எல்லையில் கள்ள நோட்டுகளை தடுக்க தனி போலீஸ் பிரிவையே மத்திய அரசு அமைத்தது.

கோர் பேங்கிங் மூலம் பணப்பரிமாற்றம்

இந்தியாவுக்குள் விநியோகிக் கப்படும் கள்ள நோட்டுகள் நல்ல நோட்டுகளாக மாற்றப்பட்ட பிறகு, இந்தியாவில் இருந்து நூற்றுக் கணக்கான நபர்கள் மூலம் வெவ் வேறு வங்கி கணக்குகளில் இருந்து பாகிஸ்தானில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒரு சில நபர் களுக்கு கோர் பேங்கிங் மூலம் அனுப்பப்படும்.

குறிப்பிட்ட அந்த பகுதி களில் செய்யப்படும் பணப் பரிமாற்றம் குறித்த தகவல்களை மட்டும் தெரிவிக்குமாறு தமிழக சிபிசிஐடி-யின் கள்ளநோட்டு தடுப்பு பிரிவு இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுள்ளது.

ஆரம்ப காலங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களே இந்தியாவுக்குள் ஊடுருவி கள்ள நோட்டு களை விநியோகம் செய்தனர். ஆனால் தற்போது இந்தியாவைச் சேர்ந்த சிலரே, அவர்களிடம் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி விநியோகம் செய்கின்றனர். பாகிஸ் தானைச் சேர்ந்தவர்கள் இப்போது இலவசமாக கள்ள நோட்டுகளை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால்தான் தற்போது கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது.

0.0006 சதவீதம் கள்ளநோட்டுகள்

இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிக ளிடம் கேட்டபோது, "நான்கு ஆண்டு களுக்கு முன்பு வரை கள்ள நோட்டு களுக்கும், நல்ல நோட்டுகளுக்கும் சுமார் 13 வித்தியாசங்கள் இருந்தன. ஆனால், தற்போதுள்ள கள்ள நோட்டுகளில் 2 வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன. கள்ள நோட்டு அச்சடிப்பவர்களும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

வாட்டர் மார்க்கர், கலர் பெயின்டிங் உள்பட அனைத்தும் ஒரிஜினல் போலவே உள்ளன. கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்கும் இயந்திரம் கூட தவறான முடிவை கொடுத்து விடுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு எஸ்.பி.ஐ. வங்கி கருவூலத்தில் ஒன்றரை கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க பல வங்கிகள் ஒத்துழைக்க மறுக்கின்றன.

இந்தியாவில் மொத்தம் 22 லட்சத்து 13 ஆயிரத்து 545 கோடி ரூபாய், இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு பொதுமக்கள் புழக்கத்துக்காக விடப்பட்டுள்ளன. இந்த தொகையுடன் கணக்கிடும் போது, இந்தியாவில் தற்போது 0.0006 சதவீதம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

அதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தற்போது இறங்கியிருக்கிறோம். டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள், குறைந்த கலெக் ஷன் உள்ள வங்கிகள் ஆகியவற்றில்தான் கள்ள நோட்டுகள் எளிதாக மாற்றப்படுகின்றன " என்றனர்.

கள்ளநோட்டு இல்லாத நாடு

கள்ள நோட்டுகளே இல்லாத நாடு ஆஸ்திரேலியா. இந்நாட்டு ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வழக்கமான காகிதத்தில் இல்லா மல், பாலிமரில் அச்சடிக்கப்படு கின்றன.

இந்த நோட்டுகள் கசங் காது, கிழியாது. இதை அச்சடிப் பதும் கடினம். இதற்கான தொழில் நுட்பம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. அதற்கு ஆஸ் திரேலிய அரசின் உதவியையும் கேட்டிருக்கிறது.

கள்ள நோட்டுகளை கண்டு பிடிப்பது தொடர்பாக இலவச பயிற்சி முகாம்களை இந்திய ரிசர்வ் வங்கி நடத்தி வருகிறது.

ஒரு நிறுவனத்தை சேர்ந்தவர் களோ, பொதுமக்களோ கள்ள நோட்டை கண்டுபிடிக்க பயிற்சி கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியை அணுகினால், அவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இலவசமாக பயிற்சி கொடுக்கின்றனர். பயிற்சி தேவைப்படுபவர்கள் 044 - 25619700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x