Published : 14 Nov 2014 01:21 PM
Last Updated : 14 Nov 2014 01:21 PM

அரசு வீட்டை காலி செய்கிறார் லாலு

டெல்லியில் உள்ள தனது அரசு வீட்டை காலி செய்கிறார் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரான லாலு பிரசாத் யாதவ்.

கடந்த 2004-ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மத்திய ரயில்துறை அமைச்சரான லாலுவுக்கு டெல்லி துக்ளக் சாலையில் அரசு பங்களா அளிக்கப்பட்டது. அதன் பிறகு அமைச்சராக இல்லையெனினும் மக்களவை உறுப்பினராக இருந்தமையால் அதே பங்களாவில் தங்கி வந்தார் லாலு.

இவர் மீது ரூ. 900 கோடி ஊழல் செய்ததாக நடந்து வந்த கால்நடை தீவன வழக்கில் கடந்த வருடம் செப்டம்பர் 30-ல் ஐந்து வருடம் தண்டனை பெற்றதால், எம்.பி. பதவி பறி போனது.

கடந்த ஆகஸ்டில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட தைக் காரணம் காட்டி, வீட்டைக் காலி செய்ய அரசிடம் மூன்று மாதங்களுக்காக அவகாசம் கேட்டிருந்தார் லாலு. அந்த அவகாசம் தற்போது முடிவடை வதால் அந்த வீட்டை சில வாரங்களில் காலி செய்யவுள்ளார்.

‘வழக்கில் தனக்கு தண்டனை கிடைக்கும் என்பதை ஊகித்த லாலு, தன் மனைவி ராப்ரி தேவி மற்றும் மகள் மிசா பாரதி ஆகியோரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வைத்தார். அவர்களில் ஒருவராவது வெற்றி பெற்று இருந்தால் காலி செய்ய வேண்டிய தேவை இருந்திருக்காது’ என லாலு கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x