Published : 29 Nov 2014 02:14 PM
Last Updated : 29 Nov 2014 02:14 PM
பறவைக் காய்ச்சல் பரவியுள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் கோழி, வாத்து போன்ற பண்ணை வளர்ப்புப் பறவைகளை கேரள அரசு அழித்து வருகிறது. இதற்காக 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டியுடன் ஆலோசனை நடத்திய பிறகு, சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ். சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆழப்புழா, பதனம்திட்டா, கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங் களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ள 12 கிராமங்களில் வாத்து, கோழி உள்ளிட்ட அனைத் துப் பறவைகளும் அழிக்கப்படும். இப்பணி 2,3 நாட்களில் நிறை வடையும். நீர்நிலைகளில் செத்து மிதக்கும் வாத்துகளை அகற்றும் பணியில் சிறப்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இக்கிராமங்களில் உள்ள 15,000 குடும்பத்தினரை மருத்துவக் குழுவினர் பரிசோதித் துள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது. மூன்று லட்சம் மாத்திரை கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப் பட்டுள்ளன. மருத்துவ அலுவலர் கள் விழிப்புணர்வுப் பிரச்சாரத் தில் ஈடுபட்டுள்ளனர். வாத்துப் பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பணி தொடங்கி யுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT