Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM

மத்திய அரசை அம்பானி நடத்தவில்லை- ஆம் ஆத்மிக்கு ப.சிதம்பரம் பதில்

மத்திய அரசை முகேஷ் அம்பானி நடத்தவில்லை. குறிப்பிட்ட இலக்கைவிட குறைவாக எரிவாயு உற்பத்தி செய்ததற்காக அவரின் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்தியில் ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பின்னணியில் இருந்து நடத்தி வருவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக சிதம்பரம் இவ்வாறு கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரம் கூறியதாவது: இயற்கை எரிவாயு விலை உயர்வு தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மீது ஆம் ஆத்மி தலைமையிலான முந்தைய டெல்லி அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது மிகவும் நகைப்புக்கிடமானது. நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவாக எரிவாயு உற்பத்தியை மேற்கொண்டதற்காக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மீது பெட்ரோலிய துறை அமைச்சகம் அதிக அளவிலான அபராதத்தை விதித்துள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின் அந்நிறுவனம் பெறவுள்ள கூடுதல் விலைக்கு ஏற்ப வங்கி உத்தரவாதத்தை தருமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில், மத்திய அரசை அம்பானி நடத்துவதாக எவ்வாறு கூற முடியும்? இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கவுள்ள விலை உயர்வை திரும்பப் பெற முடியாது என வீரப்ப மொய்லி கூறியது சரியானதே” என்றார் ப.சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x