Published : 07 Nov 2013 02:05 PM
Last Updated : 07 Nov 2013 02:05 PM

‘மங்கள்யான்’ விண்கலம் சுற்றுவட்டப் பாதையை அதிகரித்தது இஸ்ரோ

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகரித்துள்ளனர்.

இன்று அதிகாலையில் சுற்றுவட்டப் பாதையை முதல் முறையாக அதிகரித்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இன்னும் 4 முறை இதே போல் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

நாளை 2வது முறையாகவும், சனிக்கிழமை 3வது முறையாகவும் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. நவம்பர் 16-ஆம் தேதியுடன் இந்தப் பணி முற்றிலுமாக நிறைவு பெறும். இதன்மூலம் ‘மங்கள்யான்’ விண்கலம் படிப்படியாக அதன் தூரத்தை அதிகப்படுத்தி செவ்வாயை நோக்கி பயணமாகும்.

‘மங்கள்யான்’ விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கட்நத செவ்வாய்க்கிழமை (நவம்பர்- 5) பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x