

மணிப்பூர் மக்கள் கட்சியின் துணை தலைவர் மணிசனா நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத நபர்களால், இம்பால் விமானநிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது படுகொலையை கண்டித்து இன்று ஒரு நாள் முழு அடைப்புக்கு அக்கட்சியின் கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு:
காலை 5 மணியளவில் பந்த் துவங்கிவிட்டது. பந்த காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இருந்து அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.