Published : 21 May 2017 12:12 PM
Last Updated : 21 May 2017 12:12 PM
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஷ்மீர் இளைஞர்களையும் கலவரத்தில் ஈடுபட பாகிஸ்தான் தூண்டி விட்டு வருகிறது. இதனால் அங்கு அமைதி சீர்குலைந்துள்ளது.
இதுபோல் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டு வருவதால், எல்லைப் பகுதி களில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், விமானப் படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா, அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இந்தக் கடிதம் விமானப் படையில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தற்போதுள்ள நிலையில் நமக்கு வேறு வழி இல்லை. நம்மிடம் உள்ள வீரர்கள், போர் விமானங்கள், ஆயுதங்களை வைத்துக் கொண்டு, எந்த திடீர் அச்சுறுத்தலையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அதற்கேற்ப நமது பயிற்சிகளும் இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் விமானப் படைக்கு அதிகாரிகள் தேர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் சலுகைகள் காட்டியதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. அதேபோல், உடல்ரீதியாக துன்புறுத்துவது, பாலியல் ரீதியிலான துன்புறுத் தல்கள் குறித்தும் விமானப் படை மீது புகார்கள் வந்தன. இதுபோன்ற செயல்களை விமானப் படையில் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா மீது நேரடியாக போர் தொடுக்காமல், தீவிரவாத தாக்குதல்கள், ஊடுருவல், காஷ்மீரில் வன்முறையைத் தூண்டிவிடுவதன் மூலம் வழக்கத்துக்கு மாறான மறைமுக போரில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதையும் விமானப் படையில் வீரர்கள், போர் விமானங்கள் பற்றாக்குறையையும் தனோவா சுட்டிக்காட்டி உள்ளதாக அதிகாரி கள் தெரிவிக்கின்றனர். அதனால் தான் தற்போதுள்ள வசதிகளை வைத்துக் கொண்டு தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT