Published : 26 Dec 2013 12:00 AM
Last Updated : 26 Dec 2013 12:00 AM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணத்தின் போது, மாப்பிள்ளைக்கு பதிலாக மணப்பெண்ணை குதிரையில் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த விநோதம் இன்றும் தொடர்கி றது.
ஹர்தோய் மாவட்ட தலைநகரிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள கிராமம் அல்லிபூர் தண்டுவா. பொதுவாக திருமணத்தின் போது மாப்பிள்ளையை குதிரையின் மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், இந்த கிராமத்தில் மாப்பிள்ளைக்கு பதி லாக மணப்பெண் குதிரையில் உட் கார்ந்தபடி ‘ஜம்’ என ஊர்வலமாக வருகிறார்.
இதுகுறித்து, அந்த கிராமத் தைச் சேர்ந்த ஆஸ்ரே, 'தி இந்து' விடம் கூறுகையில், ’இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் வீட்டுப் பெண்களை மணம் செய்து தர முடியாத அளவுக்கு பஞ்சம் நிலவியது. எனவே, மணப் பெண்ணை அவரது மாப்பிள்ளை வீட்டிற்குக் கொண்டு போய் விட்டு விடத் தொடங்கினர். இதனால், மாப்பிள்ளை வீட்டார் செலவி லேயே திருமணம் நடந்துவிடும். இது, நாளடைவில் இப்பகுதிகளின் வழக்கமாகவே மாறிவிட்டது’ என்றார்.
திரைப்படங்களில் வருவது போல் மற்றொரு விநோதமும் நடக்கிறது. அதாவது, திருமணத் திற்கு சில நாட்கள் முன்பாகவே மாப்பிள்ளை வீட்டிற்கு மணப் பெண்ணை அனுப்பி விடுகிறார்கள். அதேபோல், மாப்பிள்ளையையும் மணப்பெண் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் திருமணத்திற்குப் பின் அவர் தனது வீட்டிற்கு வந்து மணப்பெண்ணுடன் தங்கி விடுவார்.
இதே பாணியில் கடந்த வாரம் மணம் முடித்த புதுமணப் பெண்ணான ராதிகா தேவி,
‘தி இந்து' விடம் கூறுகையில், ’இந்த முறையால், திருமணமாகும் முன்பே மாமனார், மாமியார், மைத்துனர் மற்றும் நாத்தனார் ஆகியோரைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது.
மாப்பிள்ளை வழி உறவினர்களான இவர்களைப் பிடிக்கவில்லை என்றால், மணமான கையோடு மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் போனவர்களும் உண்டு’ என்றார்.
இதுபோன்ற திருமணங்க ளுக்கு உ.பி.யில் நல்ல வரவேற்பு உள்ளது. திருமணத்திற்கு முன்பாகவே, வரப்போகும் கணவருக்கு என்ன பிடிக்கும்? பிடிக்காது? என்பதை அறிந்து கொண்டு மணமான முதல் நாளில் இருந்தே குடும்பம் நடத்த மணப்பெண் தயாராகி விடுகிறார் என்பதே அதற்குக் காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT