Published : 05 Mar 2014 12:00 AM
Last Updated : 05 Mar 2014 12:00 AM
திருப்பதியில் மீண்டும் சிறுத்தை பயம் தலைதூக்கியுள்ளது.
திருப்பதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், புலிகள், சிறுத்தைகள், கரடி போன்ற வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது இரை மற்றும் தண்ணீர் தேடி மலை அடிவாரம், மலைவழிப்பாதைகளில் வருவது வழக்கம். இதனால், புலிகள் நடமாட்டம் உள்ளபோது, மலைவழிப்பாதையை திருப்பதி தேவஸ்தானத்தினர் மூடி விடுவர்.
கடந்த திங்கள்கிழமை இரவு, திருப்பதி கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில், மானை வேட்டையாடி சிறுத்தை கொன்றுள்ளது. மானின் மிச்சங்களை செவ்வாய்க்கிழமை காலை பார்த்த மாணவர்கள், பீதி அடைந்து இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு கரடியையும் பார்த்ததாக தெரிவித்தனர். உடனடியாக தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வன விலங்கின் கால் தடங்களையும், மண்ணையும் சேகரித்து ஆய்வுக்காக ஹைதராபாத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT