Last Updated : 05 Nov, 2014 04:14 PM

 

Published : 05 Nov 2014 04:14 PM
Last Updated : 05 Nov 2014 04:14 PM

முக்கிய நகரங்களுக்கு தாலிபான் அச்சுறுத்தல்: கொல்கத்தாவில் உஷார் நிலை

பாகிஸ்தான் அருகே வாகா எல்லை தாக்கப்பட்டது, இந்தியா மீது வைக்கப்பட்ட குறிதான் என்று தாலிபான் பயங்கரவாத இயக்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே, உளவுத்துறையின் எச்சரிக்கை எதிரொலியாக, கொல்கத்தா துறைமுகப் பகுதியில் உஷார் நிலைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் அமிர்தசரஸ் - பாகிஸ்தானின் லாகூர் இடையே அமைந்துள்ள வாகா எல்லை நுழைவு பகுதியில் தினமும் நடைபெறும் கொடியிறக்கம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வர். கடந்த வாரம் இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 62 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். இந்த பயங்கரத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வாகா தாக்குதல், இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளையும் குறிவைத்தே நடத்தப்பட்டது என்றும், முதலில் வாகாவில் நடத்தப்பட்ட தாக்குதல் அடுத்தக்கட்டமாக இந்திய நகரங்களிலும் தொடரும் என்றும் எச்சரித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் தெகிர்க்-இ-தாலிபான் இயக்கத்தின் முக்கிய தலைவர் ஏசானுல்லா ஏஸான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைப்பேசி மூலம் கூறி இருப்பதாவது, "நாங்கள் ஏற்கனவே நரேந்திர மோடிக்கு இதனை தெரிவித்திருக்கிறோம், இந்தியாவில் தாக்குதல்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

பாகிஸ்தானில் எல்லையில் நுழைய முடிந்த எங்கள் தற்கொலைப்படை வீரர்கள் அங்கே நுழைவதற்கு பெரிய சிரமம் ஏற்பட்டுவிடாது. நாங்கள் ஏற்கனவே கூறி இருக்கிறோம், மோடியின் கைகள் காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் குஜராத் முஸ்லிம்களின் ரத்தத்தால் கழுவப்பட்டுள்ளது. இதற்கு நிச்சயம் விலை தந்தாக வேண்டும்" என்று அவர் கூறினார்.

'மோடி மீது பழிவாங்கல்'

இது குறித்து அந்த பயங்கரவாத இயக்கம் அதன் ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது, "நரேந்திர மோடி, நீங்கள் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்களின் கொலையாளி. காஷ்மீர் மற்றும் குஜராத்தில் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டதுக்கு நாங்கள் பழி தீர்ப்போம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியத் தலைவர் பேட்டி

பாகிஸ்தான் தெகிர்க்-இ-தாலிபான் இயக்கத்தின் முக்கியத் தலைவர் ஏசானுல்லா ஏஸான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தொலைப்பேசி மூலம் கூறும்போது, "நாங்கள் ஏற்கெனவே நரேந்திர மோடிக்கு இதனை தெரிவித்திருக்கிறோம், இந்தியாவில் தாக்குதல்கள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த முடிந்தது என்றால், அதனை இந்தியாவிலும் எங்களால் நிறைவேற்ற முடியும். இந்த எல்லையில் நுழைய முடிந்த எங்கள் தற்கொலைப்படை வீரர்கள் அங்கே நுழைவதற்கு பெரிய சிரமம் ஏற்பட்டுவிடாது.

நாங்கள் ஏற்கெனவே கூறி இருக்கிறோம், மோடியின் கைகள் காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் குஜராத் முஸ்லிம்களின் ரத்தத்தால் கழுவப்பட்டுள்ளது. இதற்கு நிச்சயம் விலை தந்தாக வேண்டும்" என்று அவர் கூறினார்.

கொல்கத்தாவில் முன்னெச்சரிக்கை

இதற்கிடையே கொல்கத்தா கடற்படை தளத்துக்கு உளவுத்துறை விதித்த எச்சரிக்கையை அடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கடற்படை போர் கப்பல்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹால்டியா துறைமுகத்தில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாதுகாப்பை பலப்படுத்தும்படியும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x