Published : 24 Feb 2014 09:28 AM
Last Updated : 24 Feb 2014 09:28 AM

ஆன்லைனில் நோ ஃபயர் ஜோன் ஆவணப்படம்

இலங்கையில் விடுதலைப் புலிக ளுக்கு எதிரான இறுதிக்கட்ட சண்டையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி இயக்குநர் கல்லம் மெக்ரே தயாரித்த >“No Fire Zone: The killing fields of Srilanka” என்ற ஆவணப்படம் தணிக்கைக்குப் பிறகு இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை வெளியானது.

இதுகுறித்து கல்லம் மெக்ரே கூறுகையில், “இந்தப் படத்தை வெளியிட தடை விதித்த மலேசியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இப்படத்தை இலவசமாக காணலாம்.

93 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படம் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் டாக்டர்கள், சிவிலியன்கள், விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்தினரால் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் படத்தை வெளியிட இந்தியா தயக்கம் காட்டியது என்னை மிகவும் பாதித்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x