Published : 03 Oct 2013 09:55 AM
Last Updated : 03 Oct 2013 09:55 AM
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ராணுவம் ஆதரிப்பதாக இந்திய ராணுவ உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டை குறித்து பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியதாவது: கடந்த 24ம் தேதியன்று, இந்திய எல்லைப் பகுதியில் கேரன் செக்டார் வழியாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையின் ஆதரேவாடு பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ தொடங்கினர். அன்று முதல் தொடர்ந்து 9வது நாளாக பயங்கரவாதிகள் பல்வேறு பகுதிகளில் பதுங்கி தாக்குதல்களை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். சுமார் 30 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை பாதுகாப்பு படையினர் உதவியிருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. இவ்வாறு குர்மீத் சிங் தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலம் சவுரா நகரில் நேற்று பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 5 காவலர்கள் காயமடைந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT