Published : 09 Nov 2014 11:26 AM
Last Updated : 09 Nov 2014 11:26 AM

மோடியின் வாரணாசி பயணத்தில் ஏழைகளுக்கான திட்டங்கள் இல்லை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி பயணத்தில் ஏழைகள் நலனுக்கான திட்டங்கள் இல்லை. கவர்ச்சிகரமாக அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுவது பலனைத் தராது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் முன்னாள் உ.பி. முதல்வருமான மாயாவதி கூறினார்.

பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மோடி முதல் முறை யாக தனது சொந்தத் தொகுதி யான வாரணாசிக்கு வெள்ளிக் கிழமை சென்றார். தனது தொகுதிக் குட்பட்ட ஜெயாபூர் என்ற கிராமத்தை தத்து எடுத்தது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.

இந்நிலையில் மோடியின் பயணம் குறித்து மாயாவதி லக்னோவில் நேற்று கூறும்போது, “ஏழைகள் நலனுக்காக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக மோடி தொடர்ந்து கவர்ச்சி கர அறிவிப்புகளை வெளியிடுகி றார். இத்தகைய வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பது பலனைத் தராது.

மோடியின் செயல்திட்டத்தில் சமூக நீதிக்கு இடமில்லை. என்றா லும் இதனை மக்கள் இந்த அரசிடம் எதிர்பார்ப்பது தவறல்ல.

தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இவற்றை நிறைவேற்றத் தவறினால் அரசியல் ஆதாயம் கருதி மோடியும் அவரது கட்சியும் பொய் வாக் குறுதி அளித்ததாக நிரூபணமாகும்.

பெயரளவிலான திட்டங்களை மட்டும் தொடங்கி வைத்து தங்களை தவறாக வழிநடத்துவதாக மோடி அரசு மீது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மத்தியில் ஆட்சி அமைத்து 6 மாதங்கள் ஆன பிறகும், மோடி வார்த்தை ஜாலம் செய்கிறார். வாரணாசி நெசவாளர்களுக்காக ரூ.2375 கோடி திட்டத்தை மோடி அறிவித்துள்ளார். இத்திட்டத்தால் நெசவாளர்களுக்கு நேரடிப் பயன்கள் ஏதுமில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x