Last Updated : 27 Aug, 2015 05:01 PM

 

Published : 27 Aug 2015 05:01 PM
Last Updated : 27 Aug 2015 05:01 PM

இயல்பு வாழ்க்கைக்கு மெல்லத் திரும்பும் குஜராத்

போலீஸ் நடவடிக்கை மற்றும் வன்முறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அகமதாபாத் போலீஸ் கமிஷனரை குஜராத் மாநில உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

செவ்வாய் இரவு தொடங்கிய படேல் சமூகத்தினரின் ஆர்பாட்டம் நேற்றும் தொடர, வியாழன் மதியம் கடைகளும், அலுவலகங்களும் திறக்கப்பட்டன. அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, துணைராணுவப் படையினர் ஆங்காங்கே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே வன்முறை மற்றும் போலீஸ் நடவடிக்கைக் குறித்து அகமதாபாது போலீஸ் கமிஷனர் வெள்ளிக்கிழமையன்று அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தொடரப்பட்ட பொது நல மனுவையடுத்து இந்த அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸார் அமளியில் ஈடுபட கேள்வி நேரத்தின் போது அவைத்தலைவர் ஒத்தி வைப்பு மேற்கொண்டார். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டமன்ற நடவடிக்கைகளிலிருந்து ஒருநாள் நீக்கம் செய்யப்பட்டனர்.

2 நாள் வன்முறை, போலீஸ் நடவடிக்கை, 9 பேர் பலி, மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் ஆகியவை பற்றி விவாதம் கோரினார் காங்கிரஸ் உறுப்பினர் ராகவ்ஜி படேல்.

படேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டு கோரிக்கையை தலைமையேற்று நடத்திய 22 வயது ஹர்திக் படேலை சிறிய நேரத்துக்கு கைது செய்யப்பட்டதையடுத்து குஜராத் முழுதும் கலவரம் வெடித்தது.

புதனன்று மாநிலம் முழுதும் பந்த் அறிவித்தார் ஹர்திக் படேல். வன்முறை தினமாக மாறிய அன்று சுமார் 100 பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. சொத்துக்களுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் பலியாகினர். கலவரத்தில் மேலும் 2 பேர் பலியாகினர். காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நிலைமைகள் கட்டுக்கடங்காமல் போனதையடுத்து ராணுவம் அழைக்கப்பட்டது, அவர்கள் அகமதாபாத் மற்றும் சூரத்தில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். பதட்டமான பகுதிகளில் 113 துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர்.

பள்ளிகளும் கல்லூரிகலும் வியாழனன்றும் இயங்கவில்லை. மொபைல் மற்றும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

ஆர்பாட்டக்காரர்கள் 8 இடங்களில் ரயில் தண்டவாளத்தை சேதப்படுத்தியதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. 12 ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட, 19 தடங்களில் ரயில்சேவைகள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் வியாழன் மதியத்துக்குப் பிறகு குஜராத்தில் இயல்பு நிலை மெல்லத் திரும்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x