Last Updated : 21 Nov, 2014 08:31 AM

 

Published : 21 Nov 2014 08:31 AM
Last Updated : 21 Nov 2014 08:31 AM

மேகேதாட்டுவில் மெகா குடிநீர் திட்டம் நிறைவேறுவது உறுதி: கர்நாடக அமைச்சர்கள் டெல்லியில் தீவிர ஆலோசனை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டுவில் 2 புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக கர்நாடக அமைச்சர்கள் டெல்லியில் முகா மிட்டு சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு குடிநீர் விநியோக கழகம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை யடுத்து, பெங்களூருவில் நடை பெற்ற விழாவில் கலந்துகொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

பெங்களூருவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 5 கட்ட குடிநீர் திட்டங்கள் நிறை வேற்றப்படும். இந்த திட்டங்கள் மூலம் புதிதாக 4,000 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப் படும். இதனால் பொது மக்களும், விவசாயிகளும் அச்சப் படத் தேவையில்லை. மக்களின் நலனுக்காக மேகேதாட்டு கூட்டுக் குடிநீர் திட்டம் நிறை வேற்றப்படும். இதற்கான எதிர்ப்பு களை சட்டரீதியாக கர்நாடக அரசு எதிர்கொள்ளும்.

இறுதிகட்ட பணிகள் தீவிரம்

பெங்களூருவுக்கு 5-ம் கட்ட காவிரி நீர் கொண்டுவரும் பணி களை முடிக்க 2020-ம் ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மேகேதாட்டுவில் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக் கப்பட்டு, அடுத்த 3 ஆண்டுகளில் முதல்கட்டப் பணிகள் முடிக்கப் படும். அடுத்தடுத்த 2 ஆண்டுகளில் 4 கட்ட பணிகள் முழுமையாக முடிக்கப்படும். 2030-ம் ஆண்டுக் குள் மேகேதாட்டு திட்டம் முழுமை யாக முடிக்கப்படும் என முதல்வர் சித்தராமையா காவிரி நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சாத்னூரிலிருந்து பெங்களூரு ஊரக மாவட்டத்துக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க‌ப்படும். இந்த குடிநீர் திட்டத்துக்காக கர்நாட அரசு ரூ.2,248 கோடி ஒதுக்கி யுள்ளது. இதன் மூலம் 2020-ம் ஆண்டு ஒரு நாளைக்கு 1400 எம் எல். நீர் விநியோகிக்கப்படும். இதற்காக 11 இடங்களில் 720 எம்.எல். அளவுக்கு நீர்தேக்கங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

டெல்லியில் தீவிர ஆலோசனை

இதனிடையே கர்நாடக அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் மனுவை சட்டப்படி எதிர் கொள்வது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் கர்நாடகத்தின் சட்ட ஆலோசகரும், மூத்த வழக்கறிஞரு மான ஃபாலி எஸ். நாரிமனை சந்தித்து ஆலோசித்துள்ளனர்.

இதனிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையா வியாழக் கிழமை மாலை டெல்லிக்கு சென் றார். அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்து கிறார். அதனைத் தொடர்ந்து வெள் ளிக்கிழமை மாலை வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமனுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது தமிழக அரசு, உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றைக் கடந்து எவ்வாறு மேகேதாட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

காவிரியின் குறுக்கே தமிழக அரசு ஒகேனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியதைப் போல கர்நாடக அரசும் மேகே தாட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடப்படும் என கர்நாடக அரசு சார்பாக தெரி விக்கப்படும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x