Published : 10 Dec 2013 09:46 AM
Last Updated : 10 Dec 2013 09:46 AM
காங்கிரஸ் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர், இதனால் அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தி யாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் கொள்கை கள் மீது மக்கள் கொண்டிருக்கும் கோபத்தை வெளிப்படுத்துகிறது. அதனால் அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
இது எதிர்க்கட்சி களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியதற்கும் இதுவே காரணம்.
அந்தக் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறு திகளை நிறைவேற்றுவது மிகவும் கடினம். பாதி விலையில் மின்சாரம் என்பதெல்லாம் கவர்ச்சிகரமான கோஷங்கள்.
ஆனால் நடை முறைக்கு சாத்தியமில்லை என்றார். இதனிடையே சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஊழல் முறை கேடுகள் அதிகரித்து வருகின்றன.
ஆனாலும் ஒரு மாற்று அரசியல் கட்சியாக காங்கிரஸை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், விலைவாசி உயர்வு, ஊழல் விவகாரங்கள் ஆகியவையே காங்கிரஸின் தோல்விக்கு முக்கிய காரணம். ராஜஸ்தானில் காங்கிரஸ் மீதான வெறுப்பால் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
அந்த மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 3 தொகுதிகளை இழந்துவிட்டது. இது வருத்தமளிக்கிறது. காங்கிரஸுக்கு எதிரான மக்க ளின் மனப்போக்கால் பாஜக பலன் அடைந்துள்ளது.
டெல்லியில் மட்டும் காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சியையும் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT