Published : 08 Nov 2014 05:35 PM
Last Updated : 08 Nov 2014 05:35 PM
2ஜி அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் கூறும்போது, "2ஜி அலைக்கற்றை முறைகேடு மீதான வழக்கில் அமலாக்கத்துறை அளித்திருக்கும் அறிக்கைகள் காங்கிரஸ் கட்சிக்கு வருத்தம் அளிப்பதாகவே இருக்கிறது.
இந்த விவாகாரத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முந்தைய மத்திய அரசு வேறு வகையில் கையாண்டு இருக்கலாம் அல்லது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிக்கு மறுப்பு தெரிவித்து, அனுமதி வழங்காமல் முதல் வருவோருக்கு முதல் உரிமை என்ற தவறான அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்.
அல்லது ஒதுக்கீடு முடிந்த பிறகாவது, நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல் ஒதுக்கீடு உரிமங்களை அவர் ரத்து செய்து அவர் உத்தரவிட்டிருக்கலாம் என்பதே எனது கருத்து. இவை யாவவுமே நடந்திராத நிலையில் தனது பிரதமர் பதவியை மன்மோகன் சிங் தானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
இந்த வழக்கு எங்களை மிகவும் பாதித்துள்ளது. ஆனால், ஏன் அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், நாங்கள் நீதிமன்ற உத்தரவுக்காக காத்துக்கொண்டிருந்தோம். இவை தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் போனதுக்கு காரணமாகும்.
ஆனால் இவை அனைத்தும் முறைசாராமால் எங்களால் விவாதிக்கப்பட்டது. இவை அனைத்தையும் நடைமுறைப்படுத்த யோசனை செய்யப்பட்டது. எனக்கு எப்போதுமே ஒரு நம்பிக்கை உண்டு, சிறிய முடிவுகள் தான் நமது வாழ்நாளில் பெரிய நெருக்கடிகளை தவிர்க்கும்" என்று சிதம்பரம் கூறி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT