Last Updated : 10 Nov, 2014 02:51 PM

 

Published : 10 Nov 2014 02:51 PM
Last Updated : 10 Nov 2014 02:51 PM

நெடுஞ்சாலை மதுபானக் கடைகளை அகற்ற கேரள அரசுக்கு உத்தரவு

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை உடனடியாக அகற்ற கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள அரசுக்கு சொந்தமான 169 மதுபானக் கடைகள் அம்மாநில நெடுஞ்சாலகளில் அமைந்துள்ளன. இந்த நிலையில் அவற்றை உடனடியாக அகற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் உத்தரவிட்டுள்ளார்.

மதுக்கடைகள் இயங்கும் காரணமாக அங்கு ஏராளமான ஓட்டுநர்கள் மது அருந்தி வாகனம் ஓட்டுவதாக தொடரப்பட்ட பொதுநல மனு ஒன்றின் மீதான விசாரணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடைகள் மூடப்பட்ட விவரம் தொடர்பான அறிக்கையை அரசு 2 வாரங்களில் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x