Published : 20 Aug 2016 03:11 PM
Last Updated : 20 Aug 2016 03:11 PM
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் நடத்தி வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசிய மோடிக்கு ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல்கள் பற்றி பேசுவதற்கு இந்தியாவுக்கு முழு உரிமையுள்ளது எனவும் கூறியுள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பினார். பலுசிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் கூறும்போது, “பாகிஸ்தான் அதிகாரிகள் ஆப்கனை பற்றியும், இந்தியாவை பற்றியும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்முறையாக இந்திய பிரதமர் மோடி பலுசிஸ்தான் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பலுசிஸ்தான் விவகாரம் குறித்து பேசியதால்தான் அந்த மக்கள் மீது பாகிஸ்தான் செலுத்தும் அடக்குமுறைகள் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளிக்கும் ராணுவ உதவி பற்றி அமெரிக்கா ஆதரவு அளித்தால் அதை வரவேற்கிறோம். ஆதரவு அளிக்கவில்லை என்றால் யாருடைய அனுமதிக்காகவும் இந்தியா காத்திருக்க தேவையில்லை.
இந்திய தனது பிரந்திய நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறது” என்றார்.
மேலும் கடந்த காலங்களில் அமெரிக்க பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவைப் பற்றியும் குற்றச் சாட்டினார்.
முன்னதாக இந்த வாரம் இந்தியா வந்த வங்கதேச அமைச்சர் ஹசானுல் ஹயு இனுவும் பலுசிஸ்தான் குறித்த மோடியின் பேச்சுக்கு தனது ஆதரவை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT