Published : 24 Feb 2014 12:00 AM
Last Updated : 24 Feb 2014 12:00 AM

ராஜீவ் பிரதமராக இருந்தபோதுதான் ஊழல்மயமானது இந்தியா: பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது மத்தியில் இருந்து ஊராட்சிகள் வரை காங்கிரஸ்தான் அதிகாரத்தில் இருந்தது. அப்போதுதான் நாடு சுரண்டலைச் சந்தித்து ஊழல்மயமானது என நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

பஞ்சாப் மாநிலத்தில், சிரோ மணி அகாலிதளத்துடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘வெற்றிப் பேரணி’ பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியாதாவது:

குஜராத்தில் கட்ச் பகுதியிலி ருந்து சீக்கிய விவசாயிகள் இடம் பெயர்வதாகக் கூறப்படும் வதந்தி பொய்யானவை. ஒரு சீக்கிய விவசாயி கூட குஜராத்தை விட்டு வெளியேறவில்லை.

பாஜக-சிரோமணி அகாலிதளத் துடனான கூட்டணி, இந்து-சீக்கியர் களின் ஒற்றுமையின் அடையாள மாகும். காங்கிரஸ் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பின்பற்றுகிறது.

நாடாளுமன்றத்தில் மிளகுத் தூளை வீசியடிக்க காங்கிரஸே காரணம். மக்களின் கண்ணில் காங்கிரஸ் மிளகுத்தூளை வீசுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்ற கட்சிகளைப் பார்த்து ஊழல் பிரச்சினைகளை எழுப்பு கிறார். இது எனக்கு ஆச்சரிய மளிக்கிறது. ஏ,பி,சி,டி (ஏ-ஆதர்ஸ், பி-போபர்ஸ், சி- கோல்கேட்- சுரங்க ஊழல், டி- தமாத்கார் கரோபார் மருமகனின் ஊழல்) என ஊழலின் மொத்த அடையாளமாக காங்கிரஸ் இருக்கிறது.

ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமராக இருந்த போது மத்தி யில் இருந்து ஊராட்சி வரை காங்கிரஸ்தான் அதிகாரத்தில் இருந்தது. அந்த சமயத்தில், டெல்லியிலிருந்து ஒரு ரூபாய் வழங்கப்பட்டால் அது மக்களுக்கு வெறும் 15 காசுகளாகச் சென்றடைந் தது. `கை' நாணயத்தை சுரண்டி எடுத்துவிட்டது. நான் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டால், கரு வூலத்தின் பாதுகாவலனாக இருப்பேன்.

ராணுவத்தில் ஒரே தரநிலை; ஒரே ஓய்வூதியம் திட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், அமல்படுத்தவில்லை. ராணுவ வீரர்களை காங்கிரஸ் வஞ்சிக் கிறது.

நான் பன்சிலால், பிரகாஷ் சிங் பாதல், ஓம் பிரகாஷ் சௌதாலா, பரூக் அப்துல்லா ஆகியோருடன் இணைந்து செயலாற்றியுள்ளேன். நிர்வாகத்தை அவர்கள் எப்படி நடத்துகின்றனர் எனப் பார்த்துள் ளேன். பிரகாஷ் சிங் பாதலிடம் கற்றுக் கொண்டதைத்தான் குஜராத்தில் செயல்படுத்தினேன் என்றார் அவர்.

நிகழ்ச்சியின்போது, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர் சுக்விர் சிங் பாதல், பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x