Published : 26 Mar 2014 12:12 PM
Last Updated : 26 Mar 2014 12:12 PM

கர்நாடகத்தில் 6 முன்னாள் முதல்வர்கள் போட்டி: இழந்த முகவரியை மீட்பார்களா?

வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் 6 முன்னாள் முதல்வர்கள் போட்டியிடுகின்றனர்.

வீரப்ப மொய்லி, தரம் சிங் (காங்கிரஸ்), பி.எஸ்.எடியூரப்பா, சதானந்த கவுடா (பாஜக), தேவகவுடா, குமாரசாமி (மதசார்பற்ற ஜனதா தளம்) ஆகியோரே இவர்கள்.

இந்த 6 பேரும் அவரவர் ஆட்சியிலும் கட்சியிலும் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த வர்கள். கால வெள்ளத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங் களால் இவர்கள் தங்கள் முகவரியை தொலைத்தனர். தற்போது அரசியலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள போராடு கின்றனர்.

வீரப்ப மொய்லி (74):

மத்திய அமைச்சரான வீரப்ப மொய்லி சிக்பளாப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மிக நீண்ட போராட் டத்திற்கு பிறகே கட்சி மேலிடம் இவருக்கு இம்முறை சீட் வழங்கியது. இவர் வெற்றி பெறுவதும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தரம்சிங் (77):

பீதர் தொகுதியில் போட்டி யிடும் தரம்சிங் மண்ணின் மைந்தர். தொகுதி யில் நல்ல பெயர் இருப்பதால் தனக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் வலம் வருகிறார்.

எடியூரப்பா (71):

சில மாதங்களுக்கு முன் தனது தாய் கட்சியான பாஜகவில் இணைந்தவர். முதல்முறையாக மக்களவைத் தேர்தலை சந்திக்கிறார். தனது சொந்த ஊரான ஷிமோகாவில் போட்டியிடுகிறார். தனது லிங்காயத்து வகுப்பினரின் வாக்குகளை நம்பி பிரச்சாரம் செய்கிறார்.

சதானந்தகவுடா (62):

எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு காரணமாக முதல்வர் ஆனவர் இவர். இதற்கு முன் உடுப்பி மற்றும் சிக்மகளூரில் போட்டியிட்ட இவர், இம்முறை பெங்களூர் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தொகுதியில் தெருக்கள் தோறும் நடந்தேசென்று வாக்கு சேகரிக்கிறார்.

எச்.டி.தேவகவுடா (81):

மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இவர் கர்நாடகத்தின் மிக மூத்த அரசியல்வாதி. 3-ம் முறையாக ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார். கரைந்து கொண்டிருக்கும் கட்சியை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.

எச்.டி.குமாரசாமி (55):

இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் ராம்நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மத்திய அமைச்சர் வீரப்பமொய்லியை எதிர்த்து சிக்பளாபூர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்கள் 6 பேரும் தங்கள் அரசியல் எதிர்காலத்தை மீட்டெடுக்க கடுமையாகப் போராடி வருவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x