Published : 09 Jul 2016 09:52 AM
Last Updated : 09 Jul 2016 09:52 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் யானையின் கால்களில் ஏற்பட்டுள்ள காயங்களை கவனிக்காமல் வால் முடியை ரூ.1,000-க்கு ஊழியர்கள் விற்பதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டது. இதையடுத்து காயமடைந்த யானையை மருத்துவ சிகிச்சைக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுப்பி வைத்தது. அத்துடன் முடியை விற்ற பாகன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயி லில் காலை, மாலை இரு வேளை களில் நடக்கும் முக்கிய பூஜை களின்போது ஐதீக முறைப்படி கோயில் முன்பு 2 யானைகள் நிறுத் தப்படுகின்றன. இந்த யானைகள் திருமலையில் உள்ள கோ சாலை களில் பராமரிக்கப்பட்டு வருகின் றன. இதற்காக 4 ஊழியர்கள் நியமிக் கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் யானை வால் முடியில் மோதிரம் செய்து அணிய விரும்பும் பக்தர்களிடம் ரகசியமாக ரூ.1,000 பெற்று, வால் முடியை ஊழியர்கள் விற்று வருவதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டது. தவிர யானையின் கால்களில் ஏற் பட்டுள்ள காயங்களையும் ஊழியர் கள் கவனிப்பதில்லை என்றும் படத் துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் காய மடைந்த யானை குறித்து விசா ரணை நடத்தினர். அத்துடன் காயமடைந்த யானை பத்மாவதிக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக திருமலையில் இருந்து திருப்பதிக்கு உடனடியாக அழைத்து செல்ல உத்தரவிட்டனர். முறையாக யானையை கவனித்துக் கொள்ளாத பாகனும் இடமாற்றம் செய்யப் பட்டார்.
கோயில் திருப்பணிக்காக பத்மாவதி யானைக்கு பதிலாக கோசாலையில் இருந்து லட்சுமி என்ற யானை வாகனம் மூலம் திருமலைக்கு அழைத்துச் செல்லப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT