Published : 13 Oct 2014 10:52 AM
Last Updated : 13 Oct 2014 10:52 AM
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாக்களித்தால் ஊழல் மலியும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் வரும் புதன்கிழமை நடை பெறுகிறது. இதையொட்டி இம் மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டம், பந்தர்பூர் நகரில் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:
சரத் பவார் கட்சி இயற்கை யிலேயே ஊழல் கட்சி. அக்கட்சி தோன்றிய நாள் முதல் இதில் எந்த மாற்றமும் இல்லை. அக்கட்சித் தலைவர்களும் தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. அக்கட்சியின் தேர்தல் சின்னமான கடிகாரத்தில் இரண்டு முட்களும் 10-ஐ காட்டுகின்றன. கடந்த 10 ஆண்டு களில் ஊழலில் அவர்கள் 10 மடங்கு முன்னேறிவிட்டார்கள் என்பதே இதன் அர்த்தம். இவர்களுக்கு நீங்கள் மீண்டும் வாக்களித்தால் ஊழலை 15 மடங் காகப் பெருக்குவார்கள்.
காங்கிரஸ், தேசியவாத காங் கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்கள் ஆட்சியில் இம்மாநிலத்தை சீரழித்துவிட்டன. மாநிலத்தின் பணத்தை காலி செய்துவிட்டன. ஆனால் இன்னும் காலம் இருக் கிறது. மாநில அரசியலில் இருந்து இக்கட்சிகளை வெளியேற்றுங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்று வதன் மூலம் உங்கள் கனவுகளை நனவாக்குகிறேன்.
இங்கு தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. இதுபோல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இங்கு இறுதிக்கட்டத்துக்கு வந் துள்ளன. இவர்கள் தங்களை சக்தி மிக்கவர்களாகவும் மக்களை தங்கள் சட்டைப் பையில் வைத் திருப்பதாகவும் நினைக்கின்றனர். மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் என்ன நிகழும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் 3,700 விவசாயிகள் இம்மாநிலத்தில் தற்கொலை செய்துகொள் கின்றனர். அவர்களுக்காக காங் கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அரசு ஒரு சொட்டு கண்ணீரைக் கூட சிந்தவில்லை. விவசாயிகள் தங் களுக்கு பங்களா, கார், டிராக்டர், ஸ்கூட்டர் அல்லது சைக்கிள் கூட கேட்கவில்லை. தண்ணீர்தான் கேட்கின்றனர். ஆனால் அதை இவர்களால் தர முடியவில்லை.
சில ஆறுகளில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் ஏற்படுகிறது. சில ஆறுகள் வறண்டு காணப்படு கின்றன. இந்த ஆறுகளை இணைக்க வேண்டும் என்பதே எனது கனவு. இதன் மூலம் விவசாயிகள் தேவையான நீரைப் பெறமுடியும்.
இம்மாநிலங்களில் மிகப்பெரிய திட்டங்களை நிறைவேற்ற பாஜக ஆர்வமாக உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். 3 மகன்கள் உள்ள குடும்பங் களில் 2 மகன்கள் பிழைப்புக் காக நகரத்துக்கு செல்கின்றனர். தொழிற்சாலைகள் இல்லாவிட்டால் இளைஞர்கள் தங்கள் வாழ்வா தாரத்துக்கு எப்படி வருவாய் ஈட்டுவார்கள்? இம்மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் புதிய தொழிற்சாலைகளை தொடங்க விரும்புகிறேன். இதன் மூலம் இளைஞர்கள் வசதியான வாழ்க்கை பெறுவார்கள் என்று மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT