Published : 05 Feb 2014 09:40 AM
Last Updated : 05 Feb 2014 09:40 AM

தெலங்கானா சட்ட முன்வடிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல்

தெலங்கானா மசோதாவை ஆந்திர சட்டப்பேரவை நிராகரித்தாலும், அதை பொருட் படுத்தாமல் தெலங்கானா சட்ட முன்வடிவுக்கு அமைச்சர்கள் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் கொடுத்தது. இந்த முன்வடிவை மத்திய அமைச்சரவை வியாழக் கிழமை பரிசீலிக்கும்.

அமைச்சர்கள் குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. 30 நிமிடங்கள் நடந்த இந்த கூட்டம் பற்றி மத்திய அமைச்சரும் குழுவின் உறுப்பினருமான குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:

தெலங்கானா சட்ட முன்வடிவுக்கு உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையிலான அமைச்சர்கள் குழு ஒப்புதல் கொடுத்தது. அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் இந்த முன்வடிவு பரிசீலிக்கப்படும். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டதும், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், குடியரசுத் தலைவரின் ஒப்பதலுக்கு இந்த முன்வடிவு அனுப்பி வைக்கப்படும்.

சீமாந்திரா பகுதிக்கு புதிய தலைநகர் அமைப்பதற்காக கணிசமான அளவுக்கு கூடுதல் நிதி, சிறப்பு பொருளாதார சலுகைத் திட்டத்தை கொண்டுள்ளது இந்த ஆந்திரப் பிரதேச மறுஅமைப்பு மசோதா என்று முக்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தெலங்கானா மசோதா சில தினங்களுக்கு முன் ஆந்திர சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பில் நிராகரிக் கப்பட்டது.

தனி தெலங்கானா அமைப் பதை ஆதரிக்கும் காங்கிரஸுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த மசோதாவை சட்டப்பேரவை நிராகரித்தாலும் புதிய மாநிலத்தை உருவாக்

குவதற்கான சட்ட நடவடிக் கைகளை நாடாளு மன்றம் மேற்கொள்ள முடியும் என வல்லுநர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் 29-வது மாநிலமாக 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தனி தெலங்கானாவை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பர் 5ம் தேதி பச்சைக்கொடி காட்டியது.

புதிதாக அமையும் தெலங்கானா 10 மாவட்டங்களை கொண்டதாக இருக்கும். ஆந்திரப்பிரதேசத்தின் எஞ்சிய பகுதி 13 மாவட்டங்களை கொண்டிருக்கும். இந்த இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக ஹைதராபாத் நகரம், 10 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்பது ஏற்பாடு.

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியோ தெலங்கானா மாநிலம் அமைவதில் விருப்பம் காட்டவில்லை. ஆந்திர சட்டப் பேரவைக்கு அனுப்பிய அதே மசோதாவை நாடாளு மன்றத்தில் வைக்கட்டும். அது ஏற்கப்பட்டால் அரசியலுக்கு முழுக்குப்போடத் தயார் என்று சவால் விடுத்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x