Published : 17 Apr 2015 12:27 PM
Last Updated : 17 Apr 2015 12:27 PM
'ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சித் தலைவராக்கும் முடிவில் கட்சி மேலிடம் உறுதியாகவே இருக்கிறது'
56 நாட்கள். ராகுல் எங்கு சென்றார்? எங்கே உள்ளார்? என இந்தியாவில் எதிர்க்கட்சிகள் சலசலத்துக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் நேற்று காலை பாங்காக்கில் இருந்து தாயகம் திரும்பினார் ராகுல் காந்தி.
விடுப்பு முடிந்து ராகுல் திரும்பிவிட்டார் என தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்ட காங்கிரஸ் கட்சியும், 19-ம் தேதி (நாளை மறு நாள்) நடைபெறவுள்ள விவசாயிகள் பேரணியில் முழு கவனத்தை திருப்பியுள்ளது. ராகுல் காந்தியும் இதற்கான ஆலோசனையில்தான் இருக்கிறாரார். 19-ம் தேதி பேரணியில் என்ன பேச வேண்டும் என்று தன்னை தயார் படுத்தி வருகிறாராம்.
இந்நிலையில் தி இந்து ஆங்கில பத்திரிகைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங் அளித்த பிரத்யேக பேட்டியில், "ராகுல் காந்தி கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். நான் மட்டுமல்ல கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இதையே விரும்புகின்றனர்" என்றார்.
காங்கிரஸ் கட்சி மேலிடம் 'தி இந்து'விடம் கூறும்போதும், "ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற முடிவில் கட்சி உறுதியாக இருக்கிறது" என தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT