Published : 03 Aug 2016 12:17 PM
Last Updated : 03 Aug 2016 12:17 PM
குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக அமித் ஷா அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில முதல்வரான ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக கடந்த திங்கள்கிழமை அறிவித்தார். இன்று (புதன்கிழமை) அவர் ஆளுநர் ஓ.பி.கோலியை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதத்தை கொடுக்கவுள்ளார். இந்நிலையில் அம்மாநில புதிய முதல்வராக அமித் ஷா அறிவிக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டது.
ஆனால், குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக அமித் ஷா அறிவிக்கப்படமாட்டார் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ஆனால் குஜராத் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அமித் ஷா நிச்சயமாக கலந்து கொள்வார் என்றார்.
குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நிதின் கட்கரி, சரோஜ் பாண்டே ஆகியோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
குஜாரத் மாநிலத்தின் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல் தலைமையில் நடத்திய போராட்டமும், இறந்துபோன பசுவின் தோலை உரித்த தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் ஆனந்தி பென்னுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தன.
இந்தச் சூழலிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT