Published : 15 Mar 2014 01:00 PM
Last Updated : 15 Mar 2014 01:00 PM

மக்களவை முதல் மற்றும் இராண்டாம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடு

16-வது மக்களவைக்கான இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்.

முன்னதாக, நிர்வாகக் காரணங்களுக்காக ஏப்ரல் 10-ம் தேதி பிஹாரின் 6 தொகுதிகளில் 3-வது கட்டத்தில் நடைபெறும் பிஹார் தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கையை முதலாவது அறிவிக்கையாக கடந்த புதன் கிழமையன்று குடியரசுத் தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதியும் மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 10-ம் தேதியும் நடைபெறுகின்றன. மொத்தம் 93 தொகுதிகளில் டெல்லி உள்பட 18 மாநிலங்களில் இத்தேர்தல் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x