Published : 10 Feb 2017 04:24 PM
Last Updated : 10 Feb 2017 04:24 PM
உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களையடுத்து பிஜ்நோரில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக கிண்டல் செய்து பேசினார்.
“கூகுள் தேடலில் ராகுல் காந்தி பெயரை இட்டால் அவரைக் கேலி செய்து ஏகப்பட்ட ஜோக்குகள் இருப்பதை காணமுடியும்” என்று கிண்டல் செய்தார்.
உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ்வை விமர்சிக்கும் போது, “கூகுளில் யார் மீது அதிக ஜோக்குகள் உள்ளதோ (ராகுல்) அந்த காங்கிரஸ் தலைவருடன் கூட்டணி மேற்கொண்டுள்ளீர்கள்” என்றார்.
மேலும் பாஜக-வுக்கு எதிராக ஜாட் சமூகத்தினர் கடும் கோபத்தில் இருப்பதையும் பொருட்படுத்தாமல், சரண்சிங்கைப் பாராட்டி பேசினார். “சவுத்ரி சரண் சிங்கை இன்சல்ட் செய்வதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் காங்கிரஸ் விட்டுவைக்கவில்லை.
உத்தரப்பிரதேசத்தைக் நீங்கள் காப்பாற்ற வேண்டுமெனில் சமாஜ்வாதி, காங்கிரஸ் குடும்பங்களை விட்டு விலகியிருக்க வேண்டும். ஒரு கட்சி மாநிலத்தை கொள்ளை அடித்தது, மற்ற கட்சியோ தேசத்தையே கொள்ளை அடித்தது.
சமாஜ்வாதிக் கட்சி ஒரேயொரு கிராமத்திற்குத்தான் நல்லது செய்துள்ளது, தன் குடும்பத்திற்குத்தான் நல்லது செய்து கொண்டுள்ளது. மற்றபடி தங்களை ஆதரிக்கும் வாக்குவங்கிக்கே ஒன்றும் செய்யவில்லை.
சமாஜ்வாதி அரசு மாநிலத்தில் பாதுகாப்பு அளிக்கும் திறனற்றது. அப்பாவி, நேர்மை குடிமக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க சமாஜ்வாதி தவறிவிட்டது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் சரண்சிங் பெயரில் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும்” என்றார் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT