Published : 09 Dec 2013 10:47 PM Last Updated : 09 Dec 2013 10:47 PM
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: சீமாந்திரா காங். எம்.பி.க்கள் நோட்டீஸ்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி சீமாந்திரா காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் எல்.ராஜகோபால், எஸ்.பி.ஒய். ரெட்டி, சாப்பம் ஹரி, ஆர். சாம்போசிவராஜ், ஹர்ஷாகுமார் மற்றும் வி.அருண் குமார் ஆகியோர் மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதில், 10 மாவட்டங்களுடன் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்ற மத்திய அமைச்சரவை அறிவித்த விவகாரம் தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, இதே பிரச்சினையில் தேலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் தனித்தனியே மக்களவைத் தலைவரிடம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அதில் வெற்றி பெறுவது உறுதி என்று காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
WRITE A COMMENT