Last Updated : 22 Jul, 2016 08:42 PM

 

Published : 22 Jul 2016 08:42 PM
Last Updated : 22 Jul 2016 08:42 PM

மாயாவதி மீது தயாசங்கர் சிங் குடும்பத்தினர் போலீஸில் புகார்: வழக்குப் பதிவு

மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக-வின் தயாசங்கர் சிங்கை எதிர்த்து நடத்திய ஆர்பாட்டத்தில் தயாசங்கர் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சித்ததாக ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் தயாவின் தாயார் புகார் அளிக்க, மாயாவதி மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் தயாசங்கர் சிங் மாயாவதியின் தேர்தல் அரசியல் குறித்து தரக்குறைவாகப் பேசியதற்காக கடும் கண்டனங்கள் எழ அவரது கட்சிப் பதவியை பறித்து உ.பி. பாஜக உத்தரவிட்டது. இதனையடுத்து இவரைக் கைது செய்யக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியினர் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் நசிமுதீன் சித்திக்கி என்பவர். இந்த ஆர்பாட்டத்தில் தயா சங்கர் குடும்பத்தினரை தரக்குறைவாக வசைபாடியதாக தற்போது தயா சங்கரின் தாயார் தேத்ரா தேவி ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, தற்போது மாயாவதி, நசிமுதீன் சித்திக்கி ஆகியோர் உட்பட 4 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தயாசங்கரின் மனைவி சுவாதி, தன்னையும் தன் 12 வயது மகளையும் பெண்ணின் கண்ணியத்தைக் குறைக்கும் விதத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வசைபாடியதால் தனது மகள் சொல்லொணாத் துயரத்தில் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தொலைபேசி மிரட்டல் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாயாவதி இது போன்ற வசைகளினால் காயமடைந்துள்ளார் என்றால் நாங்களும் காயமடையக் கூடாதா என்ன? நாடாளுமன்றத்தில் மாயாவதி என்னைக் குறிப்பிட்டார், நாடு முழுதும் மாயாவதிக்காக எழுந்து நிற்கின்றனர், நானும் பெண்தானே, என்று கொதித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x