Published : 05 Feb 2015 08:59 PM
Last Updated : 05 Feb 2015 08:59 PM

அறுபது ஆண்டுகளுக்கு முன்பே விவசாயத்திலிருந்து வெளியே வந்த சாந்தால் பழங்குடியினர்

சாந்தால் பழங்குடியினர் கடந்த சில பத்தாண்டுகளுக்கு முன்பே விவசாயத்திலிருந்து வெளியேறி வேறு சமூக பொருளாதார கலாச்சார வாழ்க்கையை நோக்கி நகர்ந்துவிட்டதாக ஏஎன்எஸ்ஐ தெரிவித்துள்ளது.

மேற்குவங்கம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள குவதலா கிராமத்தில் சமீபத்திய ஆய்வு ஒன்றை இந்திய மானுடவியல் ஆய்வுத்துறை (ஏஎன்எஸ்ஐ) நடத்தியது. அதில் கடந்த அறுபது ஆண்டுகளில் இக்கிராமத்தின் பொருளாதாரம் விவசாயத்திலிருந்து சிறுசிறு தொழில்களை நோக்கி நகர்ந்துவிட்டது கண்டறியப்பட்டது. தற்போது கிராமத்தின் பெரும்பான்மை ஆண்கள் தினக்கூலிகளாகவும், ரிக்ஷா இழுப்பவர்களாகவும், தோட்டக்காரர்களாகவும், தனியார் வீடுகளைப் பராமரிப்பவர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இக்கிராமத்துப் பெண்கள் இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் வீட்டுவேலை செய்பவர்களாக மாறியுள்ளார்கள்.

இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால் நாபேந்து தத்தா மஜூம்தார் என்பவர் 1950களில் மேற்கொண்ட களப்பணி ஆய்வான 'கலாச்சார மாற்றத்தில் சாந்தால் -ஓர் ஆய்வு' எனும் நூலில் இந்த பழங்குடி சமுதாயம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

குவதலா மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சாந்தால்களின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், வேட்டை, மீன்பிடித்தல், வீட்டுப்பிராணிகள் வளர்த்தல் மற்றும் அன்றாட கூலிவேலை ஆகியன இருந்துள்ளன. அவர்களுக்கு விவசாயமே முக்கிய வாழ்வாதாரம் என்று இந்நூல் குறிப்பிடுகிறது.

எனினும் தற்போது இக்கிராமத்தின் பொருளாதாரம் ஒவ்வொரு நாள் மாலையிலும் பணத்தை தங்கள் கையில் பார்க்கும் விதமாக உயர்ந்துவிட்டது. குவதலா கிராமத்தினர் அரசாங்கத்தாலும் அரசுசாரா அமைப்புகளாலும் நடத்தப்படும் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளின் வாயிலாக சிறுகுறுந் தொழில்கள் தங்களை உட்படுத்திக்கொண்டதாக கொல்கத்தாவில் உள்ள இந்திய மானுவியல் ஆய்வுத்துறையின் இணை ஆய்வாளர் ஷ்யாமல் குமார் நேண்டி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பழங்குடியினரின் கலாச்சாரத்திலும் சமய சம்பிரதாயங்களிலும் இந்த பொருளாதார நடவடிக்கைகள் இணைந்து ஒரு மாற்றத்தை வரவழைத்துள்ளது. சாந்தால் சமூகத்தின் கடுமையான படிநிலைகள், மாஞ்சி என அழைக்கப்படும கிராமத் தலைமை போன்ற சமூக அமைப்பை பலவீனப்படுத்தியுள்ளதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் மஜூம்தாரின் புத்தகம் தெரிவித்துள்ளது.

பதவியேற்றால் சமுதாய நடவடிக்கைகளுக்காகவே நிறைய நேரங்களை செலவிட வேண்டியிருக்கும் என்பதாலும் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்க முடியாமல் போய்விடும் என்பதாலும் சமுதாயத்தின் சில உறுப்பினர்கள் மாஞ்சி எனப்படும் சாந்தலர் சமூகத்தின் தலைமைப் பதவிக்கு வர சமுதாயத்தின் பல உறுப்பினர்களும் தயங்குவதாக நேண்டி தெரிவித்தார்.

ஜஹெர்தான் பகுதிக்கு ஆண்டுமுழுவதும் ஆய்வாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இன்று கட்டிட வேலைகள் செய்வதற்காக நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்துவிட்டது சாந்தால் இனம். ஆனாலும் இன்றும் சாந்தலர்கள் தங்கள் முக்கிய தெய்வங்களாகவே ஜஹெர்தானின் மரத் தோப்புகளையே பாவித்துவருகின்றனர்.

1865களில் கல்கத்தாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடத்தில் சாந்தால் பர்கானாவிலிருந்து இடம்பெயர்ந்துவந்த சாந்தால் பழங்குடியின குடும்பங்கள் வந்து தங்கியிருந்தனர். அதன்பின்னர் உள்ளூர் ஜமீன்தாரரிடமிருந்தே விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் கவுதாலாவைச் சுற்றியுள்ள நிலங்களையும் சாந்தால் பழங்குடியினரின் கிராமங்களையும் 1938ஆம் ஆண்டு வாங்கியது. பின்னர் விஸ்வ தானாகவே பாரதியின் குடியிருப்பாக அது மாறியதாக மஜூம்தாரின் ஆய்வுநூல் நீண்டகாலத்திற்கு பின்னோக்கி அழைத்துச்சென்று இத்தகவல்களை தெரிவிக்கிறது.

தமிழில்: பால்நிலவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x